SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆர்.கே. நகரில் மேலும் 5000 போலி வாக்காளர்கள் முடிந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி திமுக வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2017-12-07@ 01:02:28

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இன்னும் நீக்கப்படவில்லை. போலி வாக்காளர்களை நீக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது, இன்று விசாரணைக்கு வருகிறது. ஆர்.கே. நகர் தொகுதியில்  45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கும் வரை தேர்தல் நடத்த தடை கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி,  ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை பதிவு, வீடு மாறியவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். பட்டியலில் இருந்து   நீக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் நேற்று ஆஜராகி, ஆர்.கே. நகர் தொகுதியில் 100 சதவீதம் நேர்மையான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும் போலியாக உள்ள 45,819 பேரின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி வழக்கு தொடர்ந்தோம்.
வழக்கு விசாரணையில் 45,999 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தவறான தகவலை இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், 5117 போலி வாக்காளர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படவில்லை. எனவே, நீக்கப்படாத 5000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் பெயர்களை நீக்கக் கோரி கடந்த மாதம் 28ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம்.

மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த நீதிமன்றம் முடித்து வைத்த வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். மூத்த வக்கீலின் இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, மனுவாக  தாக்கல் செய்யுங்கள். நாளை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, மூத்த வக்கீல் பி.வில்சன் தலைமை நீதிபதியிடம் தெரிவித்த அனைத்து தகவல்கள் அடங்கிய மனுவை ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் நீலகண்டன் தாக்கல் செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X