SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓகி புயலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, லட்சத்தீவில் கரை ஒதுங்கிய மீனவர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரிகள் குழு: முதல்வர் உத்தரவு

2017-12-07@ 01:02:25

சென்னை:‘ஓகி’ புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை  அதிகாரிகள், அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:  ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என தெரியவந்துள்ளது. இந்த மீனவர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு அருகிலுள்ள `மாரிகோ’’ தீவிலும், குஜராத், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கிடையே உள்ள ஆழ்கடல் பகுதியிலும் இருக்கக்கூடும் என  மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்காக தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி,கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோர காவல் படை நிலையம் ஒன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் இறங்குதள வசதிகளுடன் விரைவில் நிறுவப்படும்.

மேலும், மீனவர்களின் படகுகளை கொண்டு வந்து சேர்க்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தோஷ் பாபுவை கர்நாடகா மாநிலத்திற்கும், ஷம்பு கல்லோலிகரை மகாராஷ்டிரா மாநிலத்திற்கும், சந்திரகாந்த் காம்ளேவை குஜராத் மாநிலத்திற்கும், அருண் ராயை கேரள மாநிலத்திற்கும், ஜான் லூயிஸ் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எரி எண்ணெயும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணெயும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X