SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்தலாக்குக்கு எதிரான வரைவு மசோதாவுக்கு உத்தரபிரதேசம் ஒப்புதல்: நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்

2017-12-07@ 01:01:46

லக்னோ: முத்தலாக் முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தீரப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல்சாசன சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக முத்தலாக் உள்ளது’’ என கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்புக்கு முன் 177 முத்தலாக் வழக்குகளும், பின்னர் 66 முத்தலாக் வழக்குகளும் பதிவாகின. இதையடுத்து, முத்தலாக்குக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு தயாரித்தது. இந்த வரைவு மசோதாவின்படி வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, அல்லது எலக்ட்ரானிக் முறையில் இ-மெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் ஆகியவற்றின் மூலமாக முத்தலாக் கூறினால் அது சட்ட விரோதம்.

இது செல்லுபடியாகாது. இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம். இதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். வீட்டை விட்டு வெளியேறும்படி கணவன் கூறினாலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை அணுகி சட்ட பாதுகாப்பு பெற முடியும். தனக்கும் தனது மைனர் குழந்தைகளுக்கும் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெற முடியும். இந்த வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வரும் 10ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி கடந்த 1ம் தேதி கூறியிருந்தது. இந்த வரைவு மசோதாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம். முத்தலாக் வழக்குகளில் உத்தரப் பிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தா வாரம் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த வரைவு மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaicmpalanysamy

    காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்: முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது

  • LemonFestivalMenton

    பிரான்சில் உள்ள மென்டான் நகரில் 'லெமன் திருவிழா': லட்சக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்பு

  • FloridaguncultureStudents

    புளோரிடா துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலி: துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • KenyaElephants

    யானைகளை பரிதாபமான முறையில் இடமாற்றம் செய்யும் கென்ய வனத்துறை அதிகாரிகள்..!

  • WorldPressPhoto2018

    உலக பத்திரிகை புகைப்பட போட்டி 2018: போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு..

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X