SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாங்கள் தாழ்த்தப்பட்டோர் கிடையாது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 7 சமூகங்களை சேர்க்கக் கோரி பேரணி

2017-12-07@ 00:09:36

புதுடெல்லி: தேவேந்திர குல வேளாளர் உட்பட ஏழு சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் டெல்லியில் நேற்று பேரணி நடைபெற்றது. சுமார் 5 கிமீ நடந்த இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் இருந்து வந்து கலந்து கொண்டனர். இது குறித்து கிருஷ்ணசாமி கூறுகையில்,”கடந்த 1924ம்ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் செய்த தவறுதலால் தான் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இதில் குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சில சமுதாயத்தில் எத்தனை உள்ளடங்கிய சாதிகள் உள்ளதோ அத்தனையும் ஒன்றினைத்து ஒரே இடஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர். ஆனால் பல்லன், குடும்பன், பன்னாடி, கடையன், கலாதி, வதிரியன் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் ஆகிய ஏழு சாதிகளை பட்டியலில் தாழ்த்தப்பட்ட சமுதாயமாக இணைத்துள்ளனர். இதனால் எங்களுக்கு சமுதாயத்தில் பல்வேறு வன்முறை பிரச்னைகள் நடந்தேறி வருகிறது, இதைத்தவிர மேலும் வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் கிடைக்க வேண்டிய முறையான சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை.

மேலும் எங்களை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இணைத்துள்ளதால் சுயமரியாதை கூட பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மீள எங்களை மேற்கண்ட ஏழு பிரிவினர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திட மத்திய அரசு விரைவில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்களது இந்த கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விரைவில் மனுவாக கொடுத்து வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என அவர் கூறினார். மேலும் இந்த பேரணிக்கு பாஜ கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆதரவு தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்