நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2017-11-27@ 17:48:22

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், அவற்றால் உயிருடன் உள்ள பாக்டீரியாக்களைப் பரப்ப முடியும்.
வீட்டில் பரவலாக காணப்படும் ஈக்களின், உடலின் மேலும், உடலினுள்ளும் இருக்கும் நுண்ணுயிரிக்கள் குறித்து மரபணு ஆய்வுமுறை வழியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வீட்டில் பொதுவாக பார்க்கக்கூடிய ஈக்கள் 351 வகையான பாக்டீரியாக்களை பரப்புகின்றன. சூடான காலங்களில் வரும், நீலநிற ஈக்கள் 316 வகை பாக்டீரியாக்களை பரப்புகின்றன. இந்த இருவகை ஈக்களாலும், அதிகப்படியான பாக்டீரியாக்கள் பரப்பப்படுகின்றன. பொதுசுகாதார அதிகாரிகளால், நோய்களை திடீரென பரப்பும் காரணிகளாக ஈக்கள் பார்க்கப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்
5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு
1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு
152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்
150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை!
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
பெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
11:52
மதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை
11:41
தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
11:34
நடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு
11:11
சென்னையில் அடுக்குமாடி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
10:59
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே செல்போன் வெடித்ததில் பெண் உயிரிழப்பு
10:52