SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்புக்கு பயந்து ஓடியவர் கிணற்றில் தவறிவிழுந்து பலி

2017-11-22@ 19:49:55

செய்யாறு: பாம்பை பார்த்து அலறி ஓடியபோது கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த திருவெங்கடதாங்கல்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (50), விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு பாம்பு அங்கு வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

அப்போது பக்கத்து விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பழனி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X