SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

2017-11-22@ 17:15:11

சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகத்தில் மாற்றம் செய்யப்பட்டவுள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளில் இலவசமாக பச்சரிசி, புழுங்கலரிசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை ஆகிய பொருட்கள் கட்டுப்பாட்டு பொருட்கள் என்ற பெயரில் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி 10 கிலோவும் புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரேஷன் கார்டுக்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிடங்கு பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இந்திய உணவு கழகத்தில் இருந்து 70:30 என்ற விகிதத்தில் ரேஷன் அரிசி பெறப்படுகிறது. எனவே அதே விகிதத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் கிடங்கு பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்