SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கந்துவட்டி கொடுமை: தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி

2017-11-22@ 14:51:43

தேனி: தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்துவட்டி கொடுமையால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், உத்தமபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்ப தேவைகளுக்காக சுருளி என்பவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

கடனுக்கான வட்டியாக தற்போதுவரை ரூ.3.5 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சுருளி, கடன்தொகையை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சரவணன் மிகுந்த மன வேதனையடைந்துள்ளார். இந்த சூழலில் சரவணன் தனது மனைவி சுதா, 14 வயது மகள் வைஷாலி, 12 வயது மகள் வைஷ்னவி ஆகியோருடன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

காலையில் வெகு நேரமாகியும் அவரது வீ்ட்டின் கதவுகள் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அனைவரும் மயக்க நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடன் கொடுத்த சுருளி மற்றும் அவரது நண்பர் காளியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்