SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் செல்லும் பாதையில் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய அதிமுக தொண்டர்!

2017-11-22@ 14:25:42

தூத்துக்குடி: தூத்துக்குடியில், முதலமைச்சர் செல்லும் பாதையில் அதிமுக கிளை கழக செயலாளர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு காரசேரி கிளைக் கழகச்செயலாளர் தங்கபாண்டி என்பவர், விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு முதல்வர் செல்லும் பாதையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தியும் அவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீஸார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஏற்கனவே பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் அதிமுகவிற்கு மக்களிடையே அவப்பெயர் எழுந்துள்ளது என்றும் தங்கபாண்டி தெரிவித்துள்ளார். முதல்வர் செல்லும் பாதையில் அதிமுக கிளைச்செயலாளர் ஒருவரே செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PuyalGaja2

    புயல் தாக்கி ஆறு நாளாகியும் ஆறவில்லை ரணம்: டெல்டாவில் கஜா விட்டுச்சென்ற அழியாத சுவடுகள்!

  • EidEMIladunNabi

    மிலாது நபியை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் வண்ண விளக்குகளால் மின்னிய இஸ்லாமிய கட்டிடங்கள்!

  • SidhaindaVazhkaiGaja

    கஜா புயல் காரணமாக சிதைந்த கிராமங்களில் முடங்கிய பொதுமக்களின் வாழ்க்கை..!

  • NabiBdaykabulBlast

    ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி...பலர் படுகாயம்

  • TurkeyThanksGvingTrump

    வான்கோழியை மன்னித்தார் டிரம்ப்...: அமெரிக்காவில் தொடங்கியது தேங்க்ஸ்கிவிங் விழா!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்