SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியர்களுக்கு விசா வழங்கும் விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் அரசு முடிவு!

2017-11-15@ 12:57:51

புதுடெல்லி: இந்தியர்களுக்கு விசா வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கான விசா நடைமுறையை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக  ஜப்பான் தூதரகம் தகவல் அளித்துள்ளது. இந்தியா - ஜப்பான் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசா வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்குவது மட்டுமின்றி, விசாவுக்கு விண்ணப்பிப்போரின் தகுதிக்கான வரையறைகளை தளர்த்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக இருமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 90 நாட்கள் ஜப்பானில் தங்கிக்கொள்ளவும், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் செல்ல அனுமதிக்கப்படும் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று ஜப்பான் தூதரகம் தகவல் அளித்துள்ளது. இந்த விதிமுறை தளர்வானது சுற்றுலா மற்றும் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி ஜப்பான் வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எளிமைப்படுத்தப்பட்ட விசா விதிமுறைகளின் படி, விசா விண்ணப்ப ஆவணங்களில் விண்ணப்பிக்கும் போது வேலைவாய்ப்பு சான்றிதழ் மற்றும் விளக்க கடிதம் ஆகிய இரண்டுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை நுழைவு விசாவுக்கு விண்ணப்பிக்கையில், பாஸ்போர்ட் விசா படிவம், நிதி திறன்(சுற்றுலா செல்பவர்களுக்கு), நிறுவனங்களுடன் தொடர்புடையதற்கான உறுதி ஆவணங்கள்( வணிக நோக்கில் செல்பவர்களுக்கு) ஆகியவற்றை வழங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், ஜப்பானுக்கு ஒருமுறை பயணிக்கும் இந்திய மாணவர்களுக்கு விசா விண்ணப்ப விதிமுறைகளை எளிமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்