SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதாரண்யம் அருகே படகில் ஆற்றை கடந்து பள்ளி செல்லும் மாணவர்கள்

2017-11-15@ 11:01:07

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் படகில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம்  வேதாரண்யம்  தாலுகா தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்டது வண்டல், குண்டுரான்வெளி  கிராமங்கள். இந்த இரு கிராமத்திலும் சுமார் 750 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி அடப்பாறு, நல்லாறு, வெண்ணாறு ஆகிய மூன்று ஆறுகளின்  வடிகால் பகுதி ஆகும். இங்கு பெரும்பாலும் மீன்பிடித்தொழில், விவசாயத்தையும்  நம்பி உள்ளனர். அடப்பாற்றை கடந்து செல்ல கடந்த 8 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அப்பகுதிமக்கள், பள்ளி மாணவர்கள் மழைக்காலங்களில் படகில்தான் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழையாலும், ஆற்று நீர்  சூழ்ந்துள்ளதாலும் இந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த பத்து  நாட்களாக இப்பகுதி மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவமாணவிகளும்  படகில்தான் வண்டலிலிருந்து தலைஞாயிறு சென்று வருகின்றனர். வண்டலுக்கும்  தலைஞாயிறுக்கும் ஒரே ஒரு படகு மட்டும் இயக்கப்படுவதால் மாணவமாணவிகள்  மிகுந்த சிரமப்படுகின்றனர். காலை, மாலை வேளைகளில் பள்ளிக்குச் செல்லும்  மாணவர்களோடு பொதுமக்களும் அன்றாட தேவைக்கு படகில் செல்கின்றனர். இதனால்  இருபது பேர் பயணம் செய்யக்கூடிய படகில் முப்பது முதல் நாற்பது பேர்  ஏறிச்செல்லுகின்றனர்.

இதனால் உயிருக்கு பயந்தபடியே மாணவர்கள் மூன்று  கிலோ மீட்டர் தூரம் படகில் பள்ளிக்கு சென்று திரும்புகின்றனர். படகை  பிடிக்க தண்ணீர் சூழ்ந்த அந்த சாலையில் மணிக்கணக்கில் காத்துக்  கிடக்கின்றனர். பத்துநாட்கள் தொடரும் படகு பயணத்தில் ஒருமுறை படகு  கவிழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது. அதிக மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும்  படகில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை. பெயரளவிற்கு படகின் முன்பு  நான்கு ரப்பர் வளையம் மட்டும் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.

தினமும்  அச்சத்தோடும், பயணத்தை மேற்கொள்ளும் இந்த குழந்தைகளுக்கு விபத்து  ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் ஒரே ஒரு படகு மட்டும்  இயங்குவதால் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால்  மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.  எனவே ஆற்றில் படகு  பயணம் செய்யும் மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என கோரிக்கை  விடுத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்