SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் மிகப்பெரிய வைரம் ஜெனிவாவில் ஏலம்: ரூ.222.47 கோடிக்கு விற்பனை!

2017-11-15@ 11:00:59

ஜெனிவா: உலகின் மிகப்பெரிய வைரம் ஜெனீவாவில் 33.7 மில்லியன் டாலர்(ரூ.222.47 கோடி)க்கு விற்பனையாகியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் கிருஸ்டி என்ற ஏல நிறுவனம் வைரங்களை காட்சிக்கும் ஏலத்துக்கும் வைத்திருந்தது. இதில், பச்சை நிற எமரால்ட் வைர நெக்லசின் கீழ் தொங்க விடப்பட்டுள்ள 163.41 காரட் கொண்ட வைரம் இன்று ஏலத்திற்கு வந்தது. இது ஏலமிடப்படும் உலகின் மிகப்பெரிய மாசற்ற வைரமாகும். இந்த வைரம் சுமார் 165 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய மதிப்பில் ரூ.222.47 கோடிக்கு ஏலத்தில் விலை போனது. மத்திய ஆப்ரிக்காவின் அங்கோலாவில் 2016ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட நிறமற்ற வைரமான இது, மிகவும் அரிதான வகை என கருதப்படுகிறது. 7 செ.மீ நீளம் கொண்ட இந்த வைரத்தை, வைரம் வெட்டும் கலைஞர்கள் 10 பேர் அழகாக வடிவமைத்துள்ளனர். இதற்கு முன்னர், பிரான்ஸ் அரச குடும்பத்தின் மகுடத்தை 200 ஆண்டுகளுக்கும் மேல் அலங்கரித்த 19 காரட் இளஞ்சிவப்பு வைரம் 123 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்க்து.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்