SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சாரம் இன்றி நாற்றாங்கால் கருகும் அபாயம் : உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

2017-11-15@ 10:52:41

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மின்சாரம் இல்லாததால் பலநூறு ஏக்கர் நெல் நாற்றாங்கால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விருத்தாச்சலம் அருகேயுள்ள வேப்பூர், சிறுமங்கலம், பெரியநெசலூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள் மின்சார மோட்டார்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். 10 நாட்களுக்கு முன் அப்பகுதி வயல்வெளியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் இல்லாமல் நெல் நாற்றாங்கால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதென்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது.

ஏர் உழுது நடவு பணிக்கு தயார் செய்துள்ள நிலையில் தண்ணீர் இல்லாமல் வயல்கள் காய்ந்து வருகின்றன. விவசாயிகளின் நலன் கருதி மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரி செய்து தர வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்