SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை : வயலில் நீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை

2017-11-15@ 10:27:49

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தஞ்சாவூர், சீர்காழி, கும்பகோணம், ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 நாள் இடைவெளிக்கு பின் நேற்றிரவு கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, ஒரத்தநாடு, சூரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டியது. ஆழ்குழாய் பாசனத்திற்கும், ஆற்று பாசன விவசாயத்திற்கும் இந்த மழை பயனளிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதே போல சீர்காழி சுற்றுவட்டாரங்களான கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோயில், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இங்கு கடந்த வாரம் பெய்த மழையால் வயலில் தேங்கிய மழை நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை கொட்டியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்