SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேட்ஜெட்ஸ் ரவுண்ட் அப்!

2017-11-15@ 10:21:00

நன்றி குங்குமம் முத்தாரம்

Brompton Electric bicycle

எலக்ட்ரிக் பைக் என்பது புதிதல்ல. பிராம்ப்டன் சைக்கிள் பேட்டரியை உங்களுக்கு ஏற்ற இடத்தில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சவாரி போகலாம். 25 வாட் பவரில் இயங்கும் மோட்டார் மூலம் 48 கி.மீ செல்லமுடியும். நீங்கள்  செல்லும் தூரம், சர்வீஸ் குறித்தவற்றை ஆப் மூலம் செட் செய்து கொள்ளலாம். விலை ரூ. 2,13,820

JBL Boombox

வேலை முடிந்ததும் பார்ட்டி என கிளப், பப், பீச் என கிளம்பு பவரா? உங்களுக்கு சூப்பர் துணை இந்த பூம்பாக்ஸ். 20 ஆயிரம் மில்லி ஆம்ப் பேட்டரி தினசரி உங்கள் மனதில் தடதட இசையால் எனர்ஜி கொப்பளிக்க வைக்கும். யுஎஸ்பி சார்ஜிங், வாட்டர்ப்ரூஃப் வசதிகள் உண்டு. இரவில் அடுத்த வீட்டுக்காரர்களை எழுப்பியும் சந்தோஷம் குறைந்தால் மேலும் ஸ்பீக்கர்களை கனெக்ட் செய்து மொத்த ஊரையே தூக்கம் கலைத்து வம்பிழுக்கலாம். விலை ரூ. 32,948

Penclic B2 Mouse


பேனாவும் மௌஸும் ஒன்றாகக் கலந்த ஹைபிரிட் டிவைஸ் இது. பேனா எங்கே என டார்ச்லைட் பிடித்து தேடும் வேலை மிச்சம். இந்த டிவைஸை நீங்கள் கம்ப்யூட்டரோடு ஈஸியாக ப்ளூடூத் மூலம் இணைக்க முடியும். விலை ரூ. 6,591

Somfy One security camera

ஹெச்டி கேமராவில் இருக்கும் ஸ்க்ரீன், 90 டெசிபலில் அலறும் சைரன், மைக், கேமராவை ஆட்டோமேட்டிக்காக மறைக்கும் வசதி என பல்வேறு வசதிகள் இந்த செக்யூரிட்டி கேமராவை நம்பி வாங்க தெம்பு தருகின்றன. விலை ரூ. 18,868

Sony Xperia Touch

சோனியின் சூப்பர் காம்பாக்ட் புரொஜெக்டர் இது. 80 செ.மீ திரையில் டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸை அடிப்படையாகக் கொண்டது. லேப்டாப்போடும் எளிதாக இணைத்து பயன்படுத்தலாம். அதற்குத்தானே HDMI இணைப்பு உள்ளது! விலை ரூ.1.15,364

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • AmazonSuperMarket

  பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

 • ManholeCoverJapan

  பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

 • PhilippineValcanoErruption

  பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

 • WorldEconomicConference

  ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

 • SWITZERLANDHeavySnow

  சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்