SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமானத்தில் கூடுதல் லக்கேஜ்க்கு கிலோ கணக்குப்படி பணம்

2017-11-15@ 10:19:18

உள்நாட்டு விமானப்பயணத்தில் எக்ஸிக்யூட்டிவ் டிக்கெட்டில் 40கிலோ எடையுள்ள லக்கேஜ்களையும், சாதாரண டிக்கெட்டில் 30கிலோ லக்கேஜ்களையும் பெரியவர்கள், சிறியவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. பன்னாட்டு விமானப்பயணத்தில் 30கிலோ எடையுள்ள எக்ஸிக்யூட்டிவ் டிக்கெட்டுக்களுக்கும், சாதாரண டிக்கெட்டுக்களுக்கு 20கிலோ வரையிலான உடமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடாவில் இருந்து இந்தியன் பிளைட்ஸ் டிக்கெட் வைத்திருப்பவர்கள் அவர்கள் டிக்கெட்டின் கட்டணத்தை பொறுத்து உடமைகள் அனுமதிக்கப்படுகிறது. இதன்படி 2 உடமைகள், பைகள் அனுமதிக்கப்படுகின்றன.

உடமைகள் அடங்கிய பைகளின், பெட்டிகளின் நீளம் இரண்டும் சேர்த்து 270செமீ.க்குமேல் இருக்கக் கூடாது. ஒரு பை அல்லது பெட்டியின் கனம் 32கிலோ விற்கு மேல் இருக்கக் கூடாது. மொத்தத்தில் இரண்டு பை, பெட்டிகளில் 64கிலோ வரை உடமைகள் அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் கைப்பைகளுக்கும் அளவுகள் உள்ளன. இதன்படி கைப்பையின் மூன்று பக்கங்களின் கனஅளவு 115செ.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் உடமைகளை கொண்டு சென்றால் கிலோ கணக்குப்படி கூடுதல் பணம் செலுத்த வேண்டும். உடமைகள் காணாமல் போனால் விமான நிலைய அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பிரச்னைகள் ஏற்பட்டால் பணிமேலாளரையோ, பாகேஜ் சர்வீஸ் யூனிட்ஸ் அல்லது நுகர்வோர் சேவையாளரையோ அணுகலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்