SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கண்ணீர் வருது

2017-11-15@ 06:53:54

தமிழகத்தில், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்னவெங்காயத்தின் விலை கடந்த 3 மாதங்களாக  ஏறுமுகத்திலேயே உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.80ல் இருந்து ரூ.100 வரை விற்கப்பட்ட சின்னவெங்காயம், கடந்த சில வாரங்களாக ரூ.150 முதல் 180 வரை உயர்ந்து விட்டது. அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பாதித்துள்ளது. உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால், இந்த  விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பொங்கல் வரை இதே நிலை நீடிக்கும் என்கிறார்கள்  வியாபாரிகள். இந்தியாவில் அதிகளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமாக கர்நாடகா உள்ளது.

இங்கு இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டு இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் வெங்காய பயிர்கள் தண்ணீரில்  மூழ்கி, பெருமளவு நாசமாகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்டது.  தமிழகத்தில் வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெங்காய உற்பத்தியே இல்லாத நிலை. இதன்  விளைவு, இன்று வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. பருவ மழையால், கடந்த 2013-ல் வெங்காயம் விலை உயர்ந்தபோது, மிதமிஞ்சிய மழை என்றார்கள். 2014-ல் போதிய மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்துவிட்டது என்றார்கள்.

இப்போதும் அதே கதைதான். பருவ மழைக்காலம் முடியும்போதுதான் வெங்காய விலை இப்படி தாறுமாறாக ஏறுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவை என்ன, சாகுபடிக்கு ஆகும் செலவு என்ன, எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு தேவைப்படுகிறது, எவ்வளவு சரக்கு கையிருப்பில் வைத்துக்கொள்ள முடியும், இன்னும் கட்டவேண்டிய கிடங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என நிபுணர் குழு துல்லியமாக ஆராய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போது, தோராயமாக ஆண்டுதோறும் 16 கோடி டன் வெங்காயம் தேவைப்படுகிறது. வெங்காய உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே  உள்ள இடைவெளியை மட்டுமல்ல, நுகர்வு பருவத்தையும் மாதம் வார வாரியாக கணக்கிட்டு அரசே நேரடியாக வாங்கி விநியோகிக்க துவங்கினால் விலை கட்டுக்குள்  வரும். தீப்பிடித்த பிறகு தண்ணீரை  எடுத்துக்கொண்டு ஓடுவதைவிட, தீப்பிடிக்கும் முன்பே அதை தடுப்பது தான் புத்திசாலித்தனம். இந்த விலை உயர்வு, ஆட்சியாளர்களுக்கு தந்த நல்ல பாடம். விலையை கேட்டாலே மக்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் இந்த வெங்காய விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • autumnfestivalchina

  சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

 • drumpsusma

  நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

 • rahulgandhiamedi

  உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 • usstromattack

  ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

 • pandathirtysix

  36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்