SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு : ராமேஸ்வரத்தில் இன்று ஸ்டிரைக்

2017-11-15@ 02:16:25

மண்டபம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் மீது, இந்திய கடலோர காவல் படையினர் ரப்பர் குண்டால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிச்சை (38), ஜான்சன் (37) ஆகியோருக்கு கை மற்றும் தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மீனவர்களின் படகிற்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர், பைப் மற்றும் கம்பியால் மீனவர்களை தாக்கினர். இதில் படகில் இருந்த மற்ற மீனவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுக கடற்கரைக்கு வந்தனர்.

இந்தியில் பேசக்கூறி மிரட்டல்: தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து 4 நாட்டிகல் மைல் தூரத்தில், இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். எதற்காக எங்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று தெரியவில்லை. துப்பாக்கியால் சுட்ட பிறகு, எங்கள் படகில் ஏறி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறி எங்களை பைப் மற்றும் கம்பிகளால் தாக்கினர். மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை எங்கள் படகில் இருந்தபடி அவர்கள் எங்களை அடித்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர், என்று கண்ணீருடன் தெரிவித்தனர். காயமடைந்த மீனவர்கள் பிச்சை, ஜான்சனுக்கு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருவரும் கொடுத்த புகாரின்பேரில், மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இந்திய கடலோர காவல்படையினர் மீது, கொலை முயற்சி, கம்பியால் தாக்கியது, துப்பாக்கிச்சூடு நடத்தியது என3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மீனவர் சங்கங்களின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று  வேலைநிறுத்தம் நடத்துவது, நாளை ராமேஸ்வரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்