SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியாறு அணைக்கு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு தடையில்லை : ஆய்வுக்கு பின் கண்காணிப்பு குழு தலைவர் தகவல்

2017-11-15@ 02:09:05

கூடலூர்: முல்லை பெரியாறு அணையை மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு செய்தது. குழுவில் தமிழக அரசு பிரதிநிதியான பொதுப்பணித்துறை கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியான கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் டிங்கு பிஸ்வால் உடனிருந்தனர். குழுவினர் அணை பாதுகாப்பு, உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்தனர். முன்னதாக மெயின் அணை, பேபி டேம், கேலரி, மதகுப்பகுதிகளையும், அணையின் கசிவு நீர் குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். குழுவின் ஆலோசனை கூட்டம், குமுளியிலுள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் மாலையில் நடந்தது.

கூட்டத்தில், அணையில் 152 அடி நீர் தேக்க பேபி அணையை பலப்படுத்துவது, பெரியாறு அணைக்கு மின்சாரம், வல்லக்கடவு பாதை அமைப்பது, தமிழக பொதுப்பணித்துறையின் புதிய படகை இயக்குவதற்கான அனுமதி போன்றவை குறித்து தமிழக பிரதிநிதிகள், தலைவர் குல்சன்ராஜிடம் தெரிவித்தனர். அப்போது, புதிதாக பொறுப்பேற்றிருப்பதால் பெரியாறு அணை குறித்தும், அணைக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொண்டு, அடுத்த கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தமிழக அதிகாரிகள் அணைக்கு செல்ல எந்த இடையூறும் இல்லை என குல்சன்ராஜ் தெரிவித்தார். பின்னர் குல்சன் ராஜிடம், தமிழக விவசாய ஒருங்கிணைப்புக்குழு துணை செயலாளர் செங்குட்டுவன்,  நீர்த்தேக்க பரப்பில் கேரள அரசியல்வாதிகள் உட்பட பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை அகற்ற வேண்டும் என மனு அளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்