SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகையில் அதிகாலையில் நடந்த பயங்கரம் : நாட்டு வெடி ஆலை வெடித்து தரைமட்டம் ; உடல் கருகி பெண் பலி

2017-11-15@ 02:07:27

நாகை: நாகையில் நேற்று அதிகாலையில் நாட்டு வெடி தொழிற்சாலை வெடித்து தரைமட்டமானது. இதில் ஒரு பெண் பலியானார். நாகை வடகுடி சாலை வடகுடி சத்திரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு 5 சிறு சிறு கட்டிடங்கள் உள்ளன. ஒரு கட்டிடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த கட்டிடத்தின் பின்பகுதி ஓடுகளால் வேயப்பட்டுள்ளது. முன் பகுதியில் மட்டும் சிமென்ட் `சீட்’ போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த நாட்டு வெடிகள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கட்டிடம் தரைமட்டமாகி தீப்பிடித்து எரிந்தன. சுமார் 2 கி.மீ. தூரம் வரை பயங்கர சத்தம் கேட்டது. சத்தம் காரணமாக அக்கம்பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓடி வந்தனர்.

 இதுகுறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் ேபாராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய், கூடுதல் எஸ்.பி. பத்ரிநாராயணன் மற்றும் போலீசாரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து முடிந்தவுடன், தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் யாராவது சிக்கி இருக்கிறார்களா என தேடினர். இதில் காவலாளியாக பணியாற்றிய முருகையன் மனைவி நாகம்மாள் (55), தீயில் கருகி இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாகம்மாள், கடந்த 10 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

தொழிற்சாலை உரிமையாளர் சவுந்தரவல்லியிடம் எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். தொழிற்சாலையில் பல்வேறு விதமான வெடிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்துகளை ஒன்றாக வைத்திருந்தால் விபத்து ஏற்படும் என்று தெரிகிறது. ஆனால் வெடி மருந்துகளை தனித்தனி பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் வைத்திருப்பதாக சவுந்தரவல்லி பக்கெட்டுகளை எடுத்து காட்டினார். இந்த விபத்து குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் சவுந்தரவல்லியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜன்னல் கண்ணாடி ெநாறுங்கியது: நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடி தொழிற்சாலை வெடித்து நாட்டு வெடி தயாரிக்கும் கட்டிடம் தரைமட்டமானது. இந்த சத்தத்தின் அதிர்ச்சியில் தொழிற்சாலை வளாகத்திலிருந்து சுமார் 25 மீட்டர் தொலைவில் உள்ள கண்ணன், மாதேஸ்வரன் ஆகிய 2 பேரின் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறின. சீல் வைப்பு: முன்னதாக, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், தொழிற்சாலைக்கு `சீல்’ வைக்க கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து நாட்டு வெடி மருந்து சேமித்து வைக்கும் அறை உள்ளிட்ட பகுதிகள் `சீல்’ வைக்கப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bathnatural

  சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

 • puegovolconoerupt

  கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

 • delhiproblem

  டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

 • colombiacarfestival

  கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

 • vietnamramnathgovind

  வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்