SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் இடிந்து விழும் நிலையில் 1027 பள்ளி கட்டிடங்கள்

2017-11-15@ 01:39:02

* ஆய்வில் அதிர்ச்சி
* பொதுப்பணித்துறை அலட்சியம் எனக் குற்றச்சாட்டு

சென்னை: பொதுப்பணித்துறை சார்பில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் 1027 பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் பயன்படுத்த முடியாமல் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், பள்ளிகள், வருவாய்துறை, பதிவுத்துறை அலுவலகங்கள் உட்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மேல் நிலைப்பள்ளி, உயர் நிலை பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்படுகிறது. இந்த கட்டிடங்களில் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இதனால், பள்ளி கட்டிடங்கள் மிகவும் பலவீனமடைந்து எப்போது விழும் என்று தெரியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கட்டிடங்களில் மரங்கள் முளைத்தும், ஆங்காங்கே சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இதுபோன்ற காரணங்களால் கட்டிடத்தின் உறுதி தன்மை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார் வந்தது. அதன்பேரில், அரசு பள்ளிகளில் கட்டிடத்தின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அந்தெந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 1027 பள்ளி கட்டிடங்கள் பழுதாகி இடிந்து விழும் நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில், சில கட்டிடங்கள் மட்டுமே பராமரிப்பு பணி மேற்கொள்ளும் நிலையில் இருந்தது. மற்ற கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்கள் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த கட்டிடங்களில் மாணவர்களை வைத்து பாடங்களை நடத்தினால் அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக அந்த கட்டிiத்தை இடிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கட்டிடங்களை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. தற்போது வரை 345 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை இறங்கியுள்ளது. இந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிதாக புதிய கட்டிடங்கள் கட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.500 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களுக்கு தலா ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்