SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தனியார் வீட்டுமனைப் பிரிவில் தலையில்லாத பெண் உடல் மீட்பு : படுகொலை செய்தவர்களுக்கு போலீஸ் வலை

2017-11-15@ 01:35:48

சென்னை: திருத்தணி அருகே தனியார் வீட்டுமனை பிரிவில் தலையில்லாத பெண் சடலம் மீட்கப்பட்டது. அவரை கொலை செய்த நபர்கள் யார் என திருவாலங்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி அடுத்த பாகசாலை, சின்னமண்டலி செல்லும் சாலையில், எல்.வி.புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் நிறுவன வீட்டுமனை பிரிவு உள்ளது. இந்நிலையில், நேற்று மேற்கண்ட வீட்டு மனை பிரிவில் தலையில்லாத நிலையில், வைலட் நிற ஜாக்கெட், நீல நிற புடவை அணிந்து பெண் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதியை சேர்ந்த சிலர் திருவாலங்காடு காலல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி, திருத்தணி டிஎஸ்பி பாலசந்திரன், திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அப்துல் சர்தார், எஸ்ஐ ராஜ்குமார் மற்றும் போலீஸ் மோப்ப நாய் ராம்போவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், சடலம் கிடந்த இடத்தில் இருந்து போப்ப நாய் ராம்போ இருபுறமும் 2 கி.மீ தூரம் ஓடி எந்த தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்து விட்டது. இதனையடுத்து, போலீசார் அருகில் உள்ள எல்.வி.புரம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு செல்லும் கால்வாயில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று அங்கு சடலத்தின் தலை உள்ளதா என்று தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் தலை மட்டும் கிடைக்கவில்லை. இதன்பிறகு, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்; ‘கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். கொலை நேற்று இரவுதான் நடத்திருக்கக்கூடும். கொலை நடந்த இடத்தில் டிராக்டர் சென்றதற்கான அடையாளம் உள்ளது. மேலும், சடலம் கிடந்த இடத்தில் இருந்து சில அடி தள்ளி இருந்த ரத்தக்கறை உள்ளிட்ட சில தடயங்களை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அருகில் உள்ள கிராமங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல்நிலையங்களில் காணாமல் சென்றவர்கள் பற்றி புகார் வந்துள்ளதா என்று சேகரித்து வருகிறோம் என்றனர். இதுதொடர்பாக, எல்.வி.புரம் கிராம நிர்வாக அலுவலர் திருவாலங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

  • pandathirtysix

    36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்