SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமான வரித்துறை சோதனையின்போது விவேக் வீட்டில் டைரி, வெளிநாடு கரன்சிகள் சிக்கின

2017-11-15@ 01:30:12

* பிரபல நடிகையுடன் நட்பு அம்பலம்
* 23 வி.ஐ.பி.க்கள் யார் என விசாரணை

சென்னை:  இளவரசியின் மகன் விவேக் ஆரம்பத்தில் மும்பையில் தங்கி வைர வியாபாரம் செய்து வந்தார். அப்போது பெரிய தொழில் அதிபர்கள், வைர வியாபாரிகளுடன் பழக்கம் கிடைத்தது. அப்போதுதான் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வியாபாரி சென்னையிலும் பல நகைக்கடைகளை நடத்தி வருகிறார். விவேக் மூலமாகத்தான் அந்த நகைக்கடை வியாபாரி ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் அறிமுகமாகியுள்ளார். மும்பையில் இருந்தபோது, நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பல விழாக்களில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த தகவல் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக பெண் பார்க்கும் படலம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு விவேக் மறுத்து விட்டார்.

திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் உத்தரவு. இல்லாவிட்டால் உன் விருப்பம் என்று சசிகலா கூறியுள்ளார். இதனால், வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு விவேக் சம்மதித்துள்ளார். அதன்பின்னர்தான் அண்ணாநகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் கீர்த்தனாவை பெண் பார்த்தனர். முதலில் மறுத்த விவேக், பின்னர் கீர்த்தனாவை காதலிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த சம்மதத்தை ஜெயலலிதா ஏற்கவில்லை. ஆனால் இந்த பெண்தான் வேண்டும் என்று விவேக் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். தன் கையில் கீர்த்தனாவின் பெயரை பச்சை குத்தினார். இதனால், திருமணத்துக்கு ஜெயலலிதா வரவில்லை. ஆனால் திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளை தனது வீட்டுக்கு அழைத்து ஆசிர்வாதம் செய்தார். பரிசும் வழங்கினார்.

இதற்கிடையில் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ஒரு டைரியை கைப்பற்றியுள்ளனர். அந்த டைரியில், ரகசிய குறியீடுகள் மூலம் 13 பெயர்களை அவர் குறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்க தொழில் நடத்தும் ஒருவர், பாலி தீவில் உள்ள கப்பல் விற்பனை ஏஜென்ட் ஒருவர், ரஷ்யாவின் வைர வியாபாரி ஒருவரது பெயர் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அதைத் தவிர மேலும் 10 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அது யார் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தும்போது அந்த பெயர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் விவேக் உட்பட சசிகலாவின் உறவினர் வீடுகளில் கனிசமாக வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியுள்ளன. அதில், அமெரிக்க டாலர், இங்கிலாந்து நாட்டின் கரன்சியான பவுண்ட், சிங்கப்பூர் நாட்டின் டாலர், மலேசியா நாட்டின் ரிங்கிட், இந்தோனேசியா நாட்டின் கரன்சியான ருபியா ஆகிய கரன்சிகள் சிக்கியுள்ளன. வழக்கமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இந்த கரன்சிகள் இருந்தால் அவர்கள் மீது அமலாக்கப் பிரிவு அன்னியச்செலாவனி மோசடியின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும். இந்த வருமான வரித்துறையின் சோதனையோடு நிற்காமல், சசிகலாவின் உறவினர்கள் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பாயும் என்று கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணங்கள் மாயம்?

வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின்படி புதுவை லட்சுமி ஜூவல்லரி குழுமம், வின்ட் சுப்பிரமணி, மணல் குவாரி அதிபர் ஆறுமுகசாமி, செந்தில், சுனில் ஆகியோரிடம் இருந்து ஏராளமான சொத்துக்களை சசிகலாவின் உறவினர்கள் வாங்கியுள்ளனர். ஆனால் அந்த சொத்துக்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் இந்த சோதனையில் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சொத்துக்களை விற்றவர்களிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல, ஜாஸ் சினிமாஸ் எவ்வளவுக்கு வாங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கவில்லை. அந்த டாக்குமென்ட்டுகளை விவேக் மற்றும் சத்தியம் சினிமாஸ் நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். இந்த ஆவணங்களை இரு தரப்பினரும் தராமல் ஏமாற்றி வருகின்றனர். இதனால் 2 நாளில் இந்த ஆவணங்களை தரவேண்டும் என்று விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர். தற்போது 1430 கோடிக்கு மட்டுமே சொத்து ஆணவங்கள், ரூ.7 கோடி ரொக்கம், ரூ.5 கோடிக்கு நகைகள் மட்டுமே சிக்கியுள்ளன. ஆனால் மேலும் பல ஆயிரம் கோடி சொத்து ஆவணங்கள் மாயமாகியுள்ளன. அந்த ஆவணங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறையில் உள்ளன. ஆனால் ஆவணங்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆவணங்களை கைப்பற்றும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jeyalalithabdystatue

  ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

 • SouthAfricaCapitalWater

  உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

 • somalia_bomb_blast

  சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

 • sirya_dead123

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

 • 24-02-2018

  24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X