SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழுகிய நிலையில் உள்ள வெங்காயத்தை சாம்பார் வெங்காயம் என விற்கும்படி மிரட்டல்

2017-11-15@ 01:26:45

* ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்
* ஊழியர்கள் குமுறல்

சென்னை:  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் என்று கூறப்படும் சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் சின்ன வெங்காயம் வாங்குவதை தவிர்த்து வருகிறார்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஓட்டல்களிலும் சாம்பாருக்கு சின்ன வெங்காயம் பயன்படுத்துவதற்கு பதில் பெரிய வெங்காயமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தற்போது கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் சென்னையில் உள்ள டியுசிஎஸ் கடைகளில் சிறிய அளவில் உள்ள பெரிய வெங்காயத்தை சின்ன வெங்காயம் என்று கூறி விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

மேலும், அந்த வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. கிலோ ரூ.106 விற்பனை செய்யப்பட்டும் வாங்குவதற்கு ஆள் இல்லாததால், இந்த வெங்காயம் அனைத்தும் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. இதை சமாளிக்க டியுசிஎஸ் கடைகளில் இருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு தலா 10 கிலோ மூட்டை வெங்காயம் நேற்று முன்தினம் முதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும் 10 கிலோ வெங்காயத்தை பொதுமக்களிடம் விற்பனை செய்து, டியுசிஎஸ் நிறுவனத்துக்கு ரூ.1060 கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 இதுகுறித்து ராயப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சிலர் கூறும்போது, “தரம் குறைந்த வெங்காயத்தை சின்ன வெங்காயம் என்று பொதுமக்களிடம் விற்பனை செய்ய கூட்டுறவு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் இந்த வெங்காயத்தை வாங்க சொன்னால்,  அவர்கள் எங்களிடம் சண்டைக்கு வருகிறார்கள். இந்த வெங்காயம் அனைத்தும் அழுகிய நிலையில் உள்ளது. நல்ல வெங்காயமாக இருந்தால் கூட நாங்களே வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டு அதற்கான பணத்தை கட்டி விடுவோம். இப்படி அழுகிய, எதற்கும் உதவாக வெங்காயத்தை எங்கள் தலையில் கட்டி விட்டு, ரூ.1060 கட்ட சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று குமுறலுடன் கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்