SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியது அம்பலம் : வினய்குமாரின் 300 பக்க அறிக்கையில் தகவல்

2017-11-15@ 01:17:47

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில்  கைதியாக உள்ள சசிகலாவிற்கு வி.ஐ.பி.  சலுகை வழங்கியது உண்மைதான் என வினய் குமாரின் 300  பக்க அறிக்கையில்  பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு சிறை முறைகேடு குறித்து விசாரணை நடத்திய வினய்குமாரின் 300 பக்க  அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள  முக்கிய அம்சங்கள் வருமாறு:  தண்டனை கைதியான சசிகலாவிற்கு இதுவரை வழங்காத வி.ஐ.பி சலுகைகள்   வழங்கப்பட்டுள்ளது. அதாவது சசிகலா தூங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, பூஜை  செய்வதற்கு, யோகாசனம் செய்வதற்கு என 5 அறைகள்  ஒதுக்கப்பட்டிருந்தது.

இதில்  சசிகலாவை தவிர வேறு யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இளவரசி மட்டும்  சென்று வந்தார். மேலும் சசிகலாவிற்கு  வழங்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல்  மற்றும் கதவுகளை துணிகளால் மறைத்து வைத்திருந்துள்ளனர். பிரத்யேக  மருத்துவம், சமைப்பதற்கு பெண்  கைதிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள்,  தூங்குவதற்கு மெத்தை, பொழுதுபோக்கிற்கு டி.வி உள்பட பல சலுகைகள்   வழங்கப்பட்டது. இது  தவிர பிற கைதிகளை போன்று சசிகலாவிற்கு கைதிகள் ஆடை வழங்கப்படவில்லை.  

சாதாரண உடையில் சுதந்திரமாக அவர் நடமாடி  வந்துள்ளார். மேலும் பார்வையாளர்களை சசிகலா சந்திப்பதற்கு சிறை அதிகாரிகள்  கிருஷ்ணகுமார்  மற்றும் அனிதா சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளது. சட்ட  விதிமுறைகளை மீறி ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சசிகலாவை வந்து சந்தித்து   சென்றுள்ளனர். இதற்காக பிரத்யேக அறை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கதவை  அடைத்தபடியே அவர் உறவினர்களிடம் பேசியுள்ளார். 4 முதல் 5  மணி நேரம் வரை  உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்