SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலிடத்துக்கு முன்னேற ஜடேஜாவுக்கு வாய்ப்பு

2017-11-15@ 01:16:26

துபாய் : டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐசிசி தரவரிசையில் இரு பிரிவிலும் தற்போது 2வது இடத்தில் உள்ள ஜடேஜா (28 வயது), இதுவரை 32 டெஸ்ட் போட்டியில் விளையாடி 155 விக்கெட் மற்றும் 1136 ரன் எடுத்துள்ளார். பவுலர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை விட அவர் 12 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார். ஆல்ரவுண்டர் ரேங்கிங்கில் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று நம்பர் 1 ஆக உள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினால், இரு பிரிவிலும் ஜடேஜா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற முடியும். பேட்டிங் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள கேப்டன் விராத் கோஹ்லி, ஆஸி. தொடக்க வீரர் வார்னரை விட ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார். அவரும் சிறப்பாக ரன் குவித்தால் டாப் 5ல் இடம் பிடிக்கலாம். லோகேஷ் ராகுல் (8), துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே (9), ஷிகர் தவான் (30), முரளி விஜய் (36), விருத்திமான் சாஹா (47) ஆகியோர் பேட்டிங் தரவரிசையில் முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஷ்வின் (4வது இடம்), முகமது ஷமி (19), உமேஷ் யாதவ் (27), இஷாந்த் ஷர்மா (29), புவனேஷ்வர் குமார் (37) ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்தினால் தரவரிசையில் முன்னேற முடியும். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரும் அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளதால், தரவரிசையில் முன்னேறுவதற்கு கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2018

    20-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • MigrantsMexicoAmerica

    திறந்தவளி ரயிலில் மெக்சிகோ வழியாக பயணம் செய்த டயஸ்போரா மக்கள்: புகைப்படங்கள்..

  • OklahomaBushFire

    மேற்கு ஒக்லஹோமாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2,60,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்: 2 பேர் உயிரிழப்பு

  • bushwifecondolences

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் மறைவு : பொதுமக்கள் இரங்கல்

  • fireaccidentsafety

    சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்