SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2017-11-15@ 01:16:25

* கோவாவில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில், மியான்மர் அணி முதல் நிமிடத்திலேயே கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. இடைவேளையின்போது அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இந்தியா ஏற்கனவே பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
* அசாமில் கால்பந்து பயிற்சி அகடமி தொடங்க பாலிவுட் நட்சத்திரம் ஜான் ஆப்ரகாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
* சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
* டி20 போட்டிகளில் டோனியின் செயல்பாடு குறித்து விமர்சிப்பவர்கள், தாங்கள் சாதித்தது என்ன என்பதை முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
* சிறந்த கிரிக்கெட் நிர்வாகியாக செயல்பட்ட ஜக்மோகன் டால்மியா ஒரு ஹீரோவாகவே செயல்பட்டார். அவரைப் போலவே களத்தில் நிஜமான ஹீரோவாக கேப்டன் விராத் கோஹ்லி இருக்கிறார் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டி உள்ளார்.
* யுபிஏ தொழில்முறை கூடைப்பந்தாட்ட தொடரில் விளையாட 30 இந்திய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

 • ANDHIRA_MANILAM11

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்