SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைப்பதில் கவனம்...

2017-11-15@ 01:16:24

கொல்கத்தா : இலங்கை அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்று இந்திய அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே கூறியுள்ளார். இந்தியா - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரகானே கூறியதாவது: சமிப்பத்தில் இலங்கை சென்று விளையாடியபோது டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் 9-0 என வெற்றி பெற்றதை தற்போது நடக்க உள்ள தொடருடன் ஒப்பிட முடியாது. இது முற்றிலும் வேறுபட்டது. இலங்கை அணியை எளிதாக எடைபோட மாட்டோம். டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு தொடருமே முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்துள்ளோம்.

எல்லா தொடரிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம். சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெற உள்ளதால், இங்குள்ள சூழ்நிலையை நன்கு உணர்ந்துள்ளது எங்களுக்கு சாதகமாக இருக்கும். தென் ஆப்ரிக்க தொடருக்கு தயாராக இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வோம். இலங்கை அணிக்கும் இந்த தொடர் முக்கியமானது தான். அவர்கள் நன்கு தயாராகி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களது பலம், பலவீனம் பற்றி அதிகம் சிந்திக்காமல் எங்கள் ஆட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம். தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தாலும், டெஸ்ட் போட்டிக்கு தயாராவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை.

முதல் டெஸ்ட் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் வெற்றி பெற்றால் அதே முனைப்போடு அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும். சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாட பயிற்சி எடுத்திருகிக்கிறேன். களத்தில் நூறு சதவீத நம்பிக்கையுடன் செயல்பட இது நிச்சயம் உதவும். கொல்கத்தா ஆடுகளம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. இவ்வாறு ரகானே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்