SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையின் எப்சி சிறப்பாக விளையாடும்... : பயிற்சியாளர் கிரிகோரி நம்பிக்கை

2017-11-15@ 01:16:23

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில் களமிறங்கும் சென்னையின் எப்சி அணியின் புதிய பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, 4வது சீசனில் எதிர்கொள்ள இருக்கும் சவால் குறித்து கூறியதாவது: கடந்த மூன்று சீசனிலும் மார்கோ மேட்டராஸியின்  பயிற்சியின் கீழ் சென்னை அணி மிக சிறப்பாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தது. அவரது பங்களிப்பு மகத்தானது. அதை தொடர  விரும்புகிறேன்.  தாய்லாந்தில் நடந்த மூன்று வார பயிற்சி முகாம்  மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தாய்லாந்து எப்சி அணியுடன் விளையாடிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற்து, வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் சீசனில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவிக்க முடியும் என நம்புகிறோம்.  
இந்த கிளப் நட்சத்திரங்களை உருவாக்கும் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது.  நான்காவது சீசன் முடிவில் சென்னையின் எப்சி சார்பில் சில நட்சத்திரங்கள் நிச்சயம் உருவாகுவார்கள்.

கேப்டன் ஹென்ரிக் சொரெனோ,  ரபெல் ஆகஸ்டோ,  இனிகோ கால்டரோன் போன்ற வெளிநாட்டு வீரர்களுடன், இந்திய நட்சத்திரங்களான ஜெஜே, கோல்கீப்பர் கரஞ்சித் சிங், ஜெர்ரி லால், அனிருத் தாபா, தோய் சிங், தனபால் கணேஷ் தனச்சாந்திரா சிங் ஆகியோர் நம்பிக்கையளிக்கின்றனர்.  ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் பிரத்யேகமான பாணி இருக்கும். எனது செயல்பாட்டை ஊடகங்களும் ரசிகர்களும் மதிப்பிடட்டும்.  மார்கோ அல்லது வேறு பயிற்சியாளர் போலவே, நானும் தோல்வியை வெறுப்பவன்,வெற்றியை விரும்புபவன். இவ்வாறு பயிற்சியாளர் கிரிகோரி கூறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த கிரிகோரி இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் விளையாடும் பிரபலமான ஆஸ்டன் வில்லா அணியோடு 4 ஆண்டுகள் இணைந்து பணியாற்றி உள்ளார்.  சென்னையின் எப்சி தனது முதல் லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி கோவா எப்சி அணியை சந்திக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • UnitedStatesMexico

    அமெரிக்கா-மெக்சிக்கோ இரும்பு கம்பி வேலிகளுக்கிடையே திருமணம்

  • poyas_jayallaitha

    போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தை தினகரன் ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை : போலீஸ் குவிப்பு

  • Sabarimala

    சபரிமலையில் மண்டல கால சிறப்பு பூஜைகள் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • athithi_menon11

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை அதிதி மேனன் பரிசுகள் வழங்கினார்

  • ludhiyana_pali11

    லூதியானாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்