SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தல் இந்திய நீதிபதி பண்டாரி தேர்வில் இழுபறி நீடிப்பு

2017-11-15@ 01:16:16

நியூயார்க் : சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்திய நீதிபதியான தல்வீர் பண்டாரிக்கு, ஐ.நா பொதுச் சபையில் பெரும்பான்மையும், பாதுகாப்பு கவுன்சிலில் ஆதரவு இல்லாததால் அவர் மீண்டும் தேர்வாவதில் இழுபறி நீடிக்கிறது. உலக நாடுகள் இடையே ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இடமாக சர்வதேச நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக் காலம் ஒன்பது ஆண்டுகள். தற்போது நீதிபதிகளாக உள்ள இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி (70), பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டோபர் கிரீன்வுட் (62), ரோனி ஆப்ரகாம் (பிரான்ஸ்), ஆன்டனியோ அகஸ்டோ கன்கடோ டிரின்டேட் (பிரேசில்), அப்துல்காவி அகமது யூசுப் (சோமாலியா) ஆகியோரின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 5ம் தேதியுடன் முடிகிறது. புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுக்க ஐநா.வில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில், இந்த 5 நீதிபதிகளும் மீண்டும் போட்டியிட்டனர். லெபனானை சேர்ந்த நீதிபதி நவாப் சலாம் புதிதாக களம் இறங்கியதால், கடும் போட்டி நிலவியது.
இதனால், வாக்குப்பதிவு பலமுறை நடந்தது. 4வது முறையாக நடந்த வாக்குப்பதிவில்தான் பிரான்ஸ், சோமாலியா, லெபனான் மற்றும் பிரேசிலை சேர்ந்த நீதிபதிகள் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

ஆனால், பண்டாரிக்கும் கிரீன்வுட்டுக்கும் கடும் போட்டி நிலவியது. 4வது சுற்று முடிவில் பொதுச்சபையில் பண்டாரிக்கு 115 வாக்குகளும், கிரீன்வுட்டுக்கு 76 வாக்குகளும் கிடைத்தன. ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் பண்டாரிக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. கிரீன்வுட்டுக்கு அதிகப்பட்சமாக 9 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இருவரில் ஒருவரை நீதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்க 5வது கட்ட தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பண்டாரி, ஐ.நா பொதுச் சபையில் 121 வாக்குகளையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 5 ஓட்டுக்களையும் பெற்றார். கிரின்வுட் ஐ.நா பொதுச் சபையில் 68 வாக்குகளையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 9 ஓட்டுக்களையும் பெற்றார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 3 ஒட்டுக்களை பெற முடியாததால், பண்டாரியால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கடைசி ஒரு நீதிபதியை தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து ஐ.நா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பொதுச் சபையின் குரல் நசுக்கப்படுகிறது

இந்த தேர்தல் முடிவு குழுபற்றி குறித்த ஐ.நா முன்னாள் அதிகாரியான காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் கூறுகையில், ‘‘ஐ.நா பொதுச் சபையின் குரல் நீண்ட காலமாகவே அவமதிக்கப்படுகிறது. பொதுச் சபையின் விருப்பத்தை தடுக்க இங்கிலாந்து முயற்சிக்கிறது. சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்வில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக உள்ள நாட்டின் பிரதிநிதி, ஐ.நா பொதுச் சபையில் தேவையான ஆதரவை பெற முடியாமல் போனது இதுவே முதல் முறை’’ என குறிப்பிட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

 • ANDHIRA_MANILAM11

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்