SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜிஎஸ்டி சுமையை ஏற்றிய ஜெட்லி பதவி விலக மக்கள் வலியுறுத்த வேண்டும்

2017-11-15@ 01:16:16

அகமதாபாத் : ‘ஜிஎஸ்டி சுமையை மக்கள் மீது ஏற்றிய ஜெட்லி பதவி விலக மக்கள் வலியுறுத்த வேண்டும்’ என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜ ஆட்சியின் போது நிதியமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் மோடி அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டியை குற்றம்சாட்டி அடிக்கடி பேசுவது சர்ச்சையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று குஜராத்தில் தற்போதைய பொருளாதார நிலை குறித்து பேசுவதற்காக அகமதாபாத் வந்த யஷ்வந்த் சின்ஹா நிருபர்களிடம் கூறியதாவது:

நமது நிதியமைச்சர் அருண் ஜெட்லி குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் குஜராத் மக்கள் மீது ஜிஎஸ்டி சுமையை ஏற்றி வைத்துள்ளார். மிக கடுமையான ஜிஎஸ்டி வரியை மக்கள் மீது சுமத்திய அருண்ஜெட்லியை பதவி விலக மக்கள் வலியுறுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்