SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டியால் பம்ப்செட் மூலப்பொருள் விலை 12.5% உயர்வு

2017-11-15@ 01:13:37

கோவை:  கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:  ஜிஎஸ்டி நடைமுறைக்கு முன்  பம்ப்செட்டிற்கு 5% வாட் வரி இருந்தது. இது தற்போது 12 சதவீதமாகவும், கம்ப்ரசருக்கு 28%  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் மூலப்பொருளுக்கு  12.5% கலால் வரி இருந்தது. இது தற்போது ஜிஎஸ்டியில் 18%, பெரும்பாலான மூலப்பொருள்களுக்கு 28%வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி  உயர்வால் பம்ப்செட் விலை 7% அதிகரித்துள்ளது. அதோடு, மூலப்பொருளுக்கான ஜிஎஸ்டியோடு ஒப்பிடுகையில், விற்பனை வரி 6% உள்ளதால்,  மூலப்பொருளுக்கு செலுத்திய வரியை, விற்பனையில் திரும்ப பெற முடியாமல் 6% இழப்பு ஏற்பட்டு வருகிறது.

 இந்நிலையில், ஜிஎஸ்டி நடைமுறையால் மூலப்பொருள் விலை குறையும் என்று அறிவித்திருந்த நிலையில், பம்ப்செட் உற்பத்திக்கு தேவையான  காப்பர், ஸ்டார்மிங், உருக்கு இரும்பு, காஸ்ட் அயர்ன், ஸ்டெயின்லெஸ் ஷீட் விலை  12.5 % உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு மேலும்  அதிகரித்து, தற்போதைய பம்ப்செட் விலை 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதத்தில் பம்ப்செட் விற்பனையும், உற்பத்தியும் 75  சதவீதம் குறைந்துள்ளது என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

  • glassroof_simla

    இயற்கை காட்சிகளை உள்ளிருந்து ரசிக்க வைக்கும் வகையில் ஷிம்லா-கல்கா வரை கண்ணாடி மேற்கூரை கொண்ட ரயில்!

  • bengulrguysraly

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பெங்களூரில் ஓரின சேர்க்கையாளர்கள் பிரைட் பேரணி!

  • Thailandmissuniverse

    தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டிகளுக்கு முன்னோடியாக ஆடை அலங்காரப் போட்டிகள் : பங்கேற்று அசத்திய அழகிகள்

  • santa_world

    மக்கள் முகங்களில் பளிச்சிடும் கிறிஸ்துமஸ் மகிழ்ச்சி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து உற்சாக கொண்டாட்டம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்