SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு வங்கத்துக்கு ரசகுல்லா புவிசார் குறியீடு

2017-11-15@ 01:09:39

சென்னை: ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் ஒடிசா, மேற்கு வங்கம் இடையே போட்டி ஏற்பட்டது. ரசகுல்லா தங்களுக்குதான் சொந்தம்  உரிமை கொண்டாடிய ஒடிசா, 2015 முதல் ரசகுல்லா திவாஸ் கொண்டாட்டங்களை தொடங்கியது. இதுபோல் கொல்கத்தாவும் சொந்தம் கொண்டாடியது.  இந்நிலையில் மேற்கு வங்க ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி அந்த மாநிலத்தின் உணவு மற்றும் தோட்டக்கலை மேம்பாட்டு கழக இயக்குனர்  சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்தில் 2015ம் ஆண்டு மனு செய்தார்.

அதில் ரசகுல்லாவை கடந்த 1868ம் ஆண்டு மேற்கு வங்காளத்தின், கொல்கத்தா நகரின் வடக்கு பகுதியில் நொபின் சந்திர தாஸ் என்பவர் இனிப்பு  கடை நடத்திவந்துள்ளார். அவர் தான் அறிமுகப்படுத்தி உள்ளார். இது பாலில் தயாரிக்கப்படும் இனிப்பு. உருண்டை வடிவில் பந்து போன்று  மென்மையான இந்த ரசகுல்லாவை நொபினின் வாரிசுகள் இன்றும் வடக்கு கொல்கத்தா நகரில் கடையில் விற்கின்றனர் என கூறியிருந்தனர். மனுவை விசாரித்த புவிசார் குறியீடு பதிவகம் மேற்கு வங்க  மாநிலத்துக்கு ரசகுல்லாவிற்கான புவிசார் குறியீட்டை வழங்கியுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்