SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக வெற்றியை எதிர்த்து அதிமுக வழக்கு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

2017-11-15@ 01:08:22

சென்னை:  கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் திமுக வேட்பாளர் சீத்தாபதி, அதிமுக வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன்  உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் 61,879 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 61,778 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில் திமுக  வேட்பாளர் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் திருமாறன் ஆஜரானார். வழக்கை தள்ளுபடி  செய்யக்கோரி சீத்தாபதி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதையடுத்து, அதிமுக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல்  வழக்கு தொடர்ந்து நடைபெற உள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்