SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் காதலி குடும்பத்தை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூர காதலன்

2017-11-15@ 01:06:36

* காதலி பலி * தாய், தங்கை கவலைக்கிடம்

சென்னை: காதலித்துவிட்டு பெற்றோரின் பேச்சை கேட்டு திருமணத்துக்கு மறுத்த காதலி மற்றும் அவரது குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி எரித்த  காதலனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காதலி சம்பவ இடத்திலேயே இறந்தார். காதலியின் தாய் மற்றும் சகோதரி பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த சண்முகம் கடந்த 10  ஆண்டுகளுக்கு முன்பாக தொழில் நிமித்தமாக சென்னையில் குடியேறினார். தற்போது அவர் குடும்பம் சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி நகர் 7வது  தெருவில் வசித்து வருகிறது. இவரது மனைவி  ரேணுகா (42), மகள்கள் இந்துஜா (22), நிவேதா (20) மற்றும் மனோஜ் (17) என்ற மகன் உள்ளனர்.  சண்முகம் தற்போது கனடா நாட்டில் வேலை செய்து வருகிறார். ரேணுகா தனது இரண்டு மகள்கள், மகன் மனோஜ் உடன் வசித்து வருகிறார். மூத்த  மகள் இந்துஜா பி.டெக் படித்து விட்டு தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
 
இரண்டாவது மகள் நிவேதா கலைக்கல்லூரில் பி.எஸ்.சி படித்து வருகிறார். மகன் மனோஜ் ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து  வருகிறார். இந்நிலையில், இந்துஜா வேளச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் படித்த ேபாது அவருடன்  வேளச்சேரி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ஆகாஷ்  (24) என்பவர் அதே பள்ளியில் படித்து வந்தார். ஒரே பள்ளி மற்றும் ஒரே வகுப்பு என்பதால் இந்துஜாவும் ஆகாசும் நட்பாக பழகி வந்துள்ளனர். பின்னர்  பள்ளி படிப்பு முடிந்த உடன் இந்துஜா பொறியியல் கல்லூரிக்கு சென்று விட்டார். ஆகாஷ் கலைக்கல்லூரிக்கு சென்றுவிட்டார். இவர்களின் நட்பு  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காதலாக மாறியது.  இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். ஆகாஷ் பள்ளி தோழன் என்பதால் இந்துஜா  வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.  இதனை ேரணுகாவும் கண்டு கொள்ளவில்லை.

அதேநேரம் இந்துஜா கல்லூரிக்கு செல்வதற்காக ஆகாஷ் தனது பைக்கில் கொண்டு சென்று விடுவதும், பின்னர் வீட்டிற்கு அழைத்து வருவதுமென  கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். இதனால் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆகாஷ் வேலைக்கு கூட செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.  ஆகாஷ் வேலையில்லாமல் சுற்றி வருவது இந்துஜாவுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், இந்துஜா தனது ெபாறியியல் படிப்பு முடித்து கடந்த 6  மாதங்களாக தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். இருந்தாலும் இந்துஜா செல்லும் போது ஆகாஷ் பின் தொடர்ந்தே  வந்துள்ளார். இதற்காக ஆகாஷை இந்துஜா கண்டித்தும் உள்ளார்.  

இந்நிலையில், ஆகாஷ், இந்துஜாவுடன் நட்பாக பழகி காதலாக மாறிய விவரம் ரேணுகாவிற்கு தெரியவந்தது. இது பற்றி தாய் ரேணுகா கேட்டுள்ளார்.   இந்துஜா, ஆகாஷ் பின் தொடர்ந்து வருகிறார் எனக்கு தொல்லையாக இருக்கிறது என்று அவரிடம் கூறியுள்ளார். ஆகாஷிடம் பழகுவதை நிறுத்தி  கொள்ளுமாறு தனது மகள் இந்துஜாவுக்கு ரேணுகா அறிவுரை கூறியுள்ளார்.  இதை தொடர்ந்து ஆகாஷிடம் பேசுவதை இந்துஜா கடந்த 4 மாதத்திற்கு  முன்பே நிறுத்திக்கொண்டார். ஆகாஷின் தொல்லை தாங்காமல் குடும்பத்தினர், இந்துஜாவுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர்.
   
இந்துஜாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்ற விவரம் ஆகாஷூக்கு தெரியவந்ததும், இந்துஜா வேலைக்கு செல்லும் போது வழிமறித்து, கடந்த 6  வருடமாக என்னை காதலித்து விட்டு இப்போது வேறு மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்து விட்டாயா?  என கேட்டுள்ளார். நீ எதுவாக இருந்தாலும் என்  அம்மாவிடம் பேசிக்கொள். அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என கண்டிப்புடன் இந்துஜா  கூறிவிட்டார். இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்துஜா வேலைக்கு செல்லும் போது வழி மறித்து எனக்கு பதில் சொல் என்று கூறினான்.

பின்னர் ஆகாஷ் நான் உன் அம்மாவிடம் பெண் கேட்கிறேன். அவரை சம்மதிக்க வைக்கிறேன் என கூறிவிட்டு சென்று விட்டான். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆகாஷ், டர்பைன்டைன் பயன்படுத்தும் கேனில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு நேராக ஆதம்பாக்கம் சரஸ்வதி  நகரில் உள்ள இந்துஜா வீட்டிற்கு வந்தார். முதல் மாடியில் அவரது வீட்டிற்கு சென்ற ஆகாஷ் பெட்ரோல் கேனை கதவருகே வைத்து விட்டு  கதவை  தட்டியுள்ளார். ரேணுகா கதவை திறந்தார். உன்னை (ஆகாஷ்) வீட்டின் பக்கமே வரக்கூடாது என்று சொன்னேனே, நீ ஏன் இங்கு வந்தாய்? என  கேட்டுள்ளார்.

அப்போது ஆகாஷ், இந்துஜாவை அழைத்து நீ என்னை திருமணம் செய்து கொள்கிறாயா இல்லையா?  என்னை விட்டு விட்டு வேறு ஒருவரை  திருமணம் செய்து கொள்வாயா?  என கேட்டு உன் தாயார் முன்னிலையிலேயே என்னை திருமணம் செய்து கொள் என ஆகாஷ் மிரட்டினான். அதற்கு   இந்துஜா, எனது பெற்றோர் என்ன கூறுகிறார்களோ அதன் படிதான் செய்வேன். நீ சொல்கிற படி நான் நடக்க முடியாது என கூறினார். இதில்  ஆத்திரமடைந்த ஆகாஷ் வீட்டின் கதவு அருகே வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தனது உடலில் சிறிது ஊற்றினான்.  நீ சம்மதிக்க வில்லை  என்றால் உன் மீதும் பெட்ரோல் ஊற்றி உன்னையும் சாக அடித்து விடுவேன் என இந்துஜாவை மிரட்டினான். இதனால் செய்வதறியாது அனைவரும்  திகைத்தனர்.  

அப்போது திடீர் என இந்துஜா மீது ஆகாஷ் பெட்ரோைல ஊற்றினான். அதனை தடுத்த தாயார் ரேணுகா மீதும் பெட்ரோல் பரவியது. மற்றும் மகள்  நிவேதா மகன் மனோஜ் மீதும் ஆகாஷ் பெட்ரோல் ஊற்றினார். பின்னர் ஆகாஷ் கேனை வீசி எறிந்து விட்டு பாக்கெட்டில் தயாராக வைத்திருந்த  லைட்டரை வைத்துக்கொண்டு இப்போதாவது சொல்,  என்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா இல்லையா என மிரட்டினார். நீ செய்வது சரியில்லை என்று கூறி ரேணுகா குடும்பத்தினர் எச்சரித்து திட்டினர். உடனே லைட்டரை இந்துஜா உடையில் ஆகாஷ் பற்ற வைத்தார்.  அதனை அணைக்க முயற்சி செய்த 3 பேர் மீதும் தீ பற்றியது. இதில் 4 பேரும் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு தரை தளத்தில் இருந்த ராம் குமார் என்பவர் மேலே ஓடி வந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். ஆகாஷ் அப்பொழுது எதிரே இறங்கி ஓடினார். ராம்குமார் மேலே சென்று பார்த்ததில் 4 பேர் அலறி தீயில் புரண்டனர். மற்றவர்கள் உதவியுடன் சேர்ந்து  தீயை அணைத்தனர். அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து இரவு 9 மணி அளவில்  ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே  ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்திற்கு வந்து பலத்த தீக்காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கீழ்ப்பாக்கம்  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இந்துஜா, வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். மேலும் பலத்த தீக்காயம் அடைந்த ரேணுகா, மகள் நிவேதா,  மற்றும் மகன் மனோஜ் ஆகியோரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு ரேணுகாவும், நிவேதாவும்  பலத்த தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மனோஜூக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும்  இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆகாஷை தேடிவந்தனர். இந்நிலையில், வேளச்சேரி காமராஜர்புரத்தில் பதுங்கி இருந்த   ஆகாஷை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாணையில், இந்துஜாவை மிரட்டுவதற்காக பெட்ரோல் கேனை எடுத்து வந்ததாகவும் அவர்கள் எதற்கும்  ஒத்து வராததால் ஆத்திரத்தில் பெட்ரோல்  ஊற்றி எரித்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் ஆகாஷை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று மாலை புழல் சிறையில்   அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து கனடாவில் உள்ள  இந்துஜாவின் தந்தை சண்முகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த  சம்பவத்தால்  ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

அணைத்ததில் எனக்கும் தீக்காயம்...!

பெட்ரோல் உற்றி கொளுத்திய சம்பவத்தை நேரில் பார்த்த ராம்குமார் கூறும் போது, திடீர் என வீட்டின் மேல் மாடியில் அலறல் சத்தம் கேட்டது. நான்  மாடிக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்தவர்கள் எரிந்து துடித்துக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனே அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் தீயை அணைத்தோம். இதனால் எனது கையிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் ஓடியதை பார்த்தனர். ஆனால் அவன் தான்  கொளுத்தினான் என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை. நன்றாக பழகிய ஒரு குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது எனக்கு மிகவும்  வேதனை அளிக்கிறது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-11-2017

    24-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • YuvaraniVinayakaPrize

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு நடிகை யுவராணி பரிசுகள் வழங்கினார்

  • ExpresshighwayNitin

    தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி

  • ThiruvannamalaiKarthikaiDeepa

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • Mike_Hughes

    பூமி தட்டையானது என்பதை நிரூபிக்க சொந்தமாக ராக்கெட் தயாரித்த கார் ஓட்டுனர்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்