SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ப.சிதம்பரம் மற்றும் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து

2017-11-15@ 01:05:33

சென்னை : கர்நாடக மாநிலம் குடகில் சிதம்பரத்திற்கு சொந்தமான காபி எஸ்டேட்டில்  கடந்த 2009-10ம் ஆண்டு கிடைத்த வருமானம் தொடர்பாக  வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்று கூறி வருமான வரித்துறை சார்பில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் பதிலளிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து, நான்கு பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விவசாய நிலத்தில் இருந்து வந்த வருவாய்க்கு வருமான வரி சட்டம் 10(1)ன்படி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் வருமான வரித்துறை எந்தவித முறையான நடைமுறையையும் பின்பற்றவில்லை. ஆயிரக்கணக்கான பேர் வருமான வரி செலுத்தாமல் உள்ளனர். மனுதாரர்கள் ஏற்கனவே துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில்,  நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி வருமான வரித்துறையின் நோட்டீஸை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்