SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரை விலை உயர்வை அடுத்து அதிரடி ரேஷனில் உளுந்தம் பருப்பு கிடையாது : அமைச்சர் அறிவிப்பு

2017-11-15@ 00:58:18

சென்னை: தமிழகத்தில் ரேஷன்  கடைகளில் பொதுமக்களுக்கு இனி உளுந்தம் பருப்பு வழங்கப்படாது என்று  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  கூறினார்.  சென்னை, தலைமை செயலகத்தில்  நேற்று உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் துறை  அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். ரேஷனில் உளுந்தம் பருப்பு விநியோகிக்கப்படாது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சர்க்கரை விலையை 25 ரூபாயாக  உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இரண்டாவதாக இந்த அதிரடி முடிவை அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம்  கூறியதாவது: தமிழகத்தில் பொது விநியோகத்தை முழு கணினி மயமாக்கும்  திட்டத்தின் கீழ் கடந்த  ஏப்ரல் மாதம் 1ம்தேதி முதல் மின்னணு குடும்ப அட்டை  (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 94 லட்சம் குடும்ப  அட்டைகளில்  இதுவரை 1.71 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 23 லட்சம் பேருக்கும் குடும்ப அட்டைகளில் புகைப்படம் மற்றும்   திருத்தங்கள் செய்யும் பணி நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 15ம்  தேதிக்குள் முழுமையாக பணி முடித்து அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு   வழங்கப்பட்டு, அனைவரும் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தும் நிலை  ஏற்படுத்தப்படும்.

எக்காரணத்தை கொண்டும் ரேஷன் பொருட்கள் யாருக்கும்  நிறுத்தப்படாது. விருதுநகர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் 66 பேருக்கு  வழங்கப்பட்ட  ஸ்மார்ட் கார்டில் புகைப்படம் மாறி உள்ளதாக புகார் வந்துள்ளது.  அங்கு தனி குழு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தி மூன்று நாளில் புதிய   கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் பருப்பு தேவைக்கு  ஏற்ப வாங்க ஒவ்வொரு மாதமும் டெண்டர் விடப்படுகிறது. 13 ஆயிரம்  மெட்ரிக் டன்  துவரம் பருப்பு, 7 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு வாங்கி கொண்டு  இருந்தோம். ஒருத்தருக்கு துவரம் பருப்பு கிடைக்கிறது,  இன்னொருவருக்கு  உளுந்தம் பருப்பு கிடைக்கும் நிலை இருந்தது. அனைவருக்கும் ஒரு கிலோ பருப்பு  மானிய விலையில் கிடைக்கும் வகையில்  உளுந்தம் பருப்பு கொள்முதல்  நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் உளுந்தம் பருப்பு இனி  கிடைக்காது.

துவரம் பருப்பு மட்டும் மாதம் 21 ஆயிரம் மெட்ரிக் டன்  கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு என்பதை உறுதி  செய்துள்ளோம். ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த சர்க்கரை விலை ரூ.25ஆக உயர்த்தப்பட்டதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  இந்தியாவிலேயே  மானிய விலையில் தமிழகத்தில் மட்டும்தான் சர்க்கரை வழங்கப்படுகிறது. ஒரு கிலோ சர்க்கரைக்கு ரூ.20 மானியம் தமிழக அரசு வழங்கி  வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி,  உணவு பொருள் வழங்கல்  மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் மதுமதி மற்றும் துறை  அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தமிழகத்தில் உள்ள 1.94 கோடி குடும்ப அட்டைகளில் 1.71 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
* டிசம்பர் 15க்குள் மீதம் உள்ள 23 லட்சம் பேருக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai_meenut11

  மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா

 • berlin_bomb_war

  இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!

 • 10schooldata

  10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்

 • governor_palace11

  பெண்களை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம்

 • ANDHIRA_MANILAM11

  ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மாநிலமெங்கும் ஏராளமானோர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்