SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா அழைத்து செல்வதாக பல லட்சம் மோசடி : டிராவல்ஸ் நிறுவன அதிபர் கைது

2017-11-15@ 00:20:38

சென்னை : ஜெருசலம் நகருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் அதிபரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ரமணி (65). இவர், தனது உறவினர் தோழிகளுடன் இஸ்ரேல் நாடான, ஜெருசலம் செல்ல முடிவு செய்தார். அதற்காக, அவர்கள், குரோம்பேட்டை ராதா நகரில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் சாலமன் ராஜன் (46) என்பவரை சந்தித்துள்ளனர். அவரும், ரமணி குழுவினரை ஜெருசலம் சுற்றுலா அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். இதையடுத்து, ரமணி மற்றும் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர், ஜெருசலமுக்கு 10 நாள் சுற்றுலா செல்வதற்காக, கடந்த ஜூன் மாதம், சாலமன் ராஜனிடம்  ரூ.12.5 லட்சம் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் சாலமன் ராஜன், ரமணி குழுவினரை, சுற்றுலா அழைத்து செல்ல எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

இதனால், விரக்தியடைந்த அவர்கள் சாலமன் ராஜனை சந்தித்து பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். கடைசியாக, சாலமன் ராஜனை சந்திக்க சென்றபொது, அவர் அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து, ரமணி நேற்று முன்தினம் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கந்தகுமார், எஸ்ஐ அனிருதின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சாலமன் ராஜனை நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சாலமன் ராஜன், ரமணியிடம் பணத்தை ஏமாற்றியது போலவே, சென்னை மற்றும் புறகநகர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவரை, அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-11-2018

    13-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HodeidahYemen

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரம்...! ஹூடேடா துறைமுகத்தில் நடந்த சண்டையில் 61 பேர் பலி

  • PizzaGuinnessArgentina

    அர்ஜென்டினாவில் 12 மணி நேரத்தில் 11,287 பீட்சாக்களை தயாரித்து சமையல் கலைஞர்கள் கின்னஸ் சாதனை

  • JordanFloodPetra12

    ஜோர்டானில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

  • EbolaCongoAfrica200

    தீவிரமடையும் எபோலா வைரஸ்..: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 200 பேர் பலி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்