SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் கழுத்தை இறுக்கி உறவினர் கொலை

2017-11-15@ 00:19:33

அண்ணாநகர் : சென்னை கோயம்பேட்டில் மனைவியின் கள்ளக்காதலன் கிடைக்காததால் அவரது உறவினரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி, கொலை செய்த கணவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி அடுத்த ஆமணக்கம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (27). இவரது தாய் மாமன் வல்லநாடு பகுதியை சேர்ந்த பழனிசாமி (47). இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வந்தனர். கோயம்பேடு தெற்கு மாட வீதியில் வாடகைக்கு வீடு எடுத்து, வசித்து வந்தனர். நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலைய காவல்நிலையத்துக்கு பழனிசாமி சென்று, ‘‘எனது உறவினர் சசிகுமார் இறந்து விட்டார்’’ என்று கூறி உள்ளார். உடனே இன்ஸ்பெக்டர் ரூபன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து, சசிகுமாரின் சடலத்தை பார்வையிட்டார். அப்போது, அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட காயம் இருந்து உள்ளது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. எனவே சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து, போலீசார் பழனிசாமியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழனிசாமிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனால் பெண்ணின் கணவர் டேவிட் மற்றும் அவரது நண்பர் சிவபெருமான் ஆகியோர் பழனிசாமி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமியை தீர்த்துக்கட்டுவதற்காக டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் அவரது வீட்டுக்கு சென்று உள்ளனர். அப்போது பழனிசாமி அங்கு இல்லை. உறவினர் சசிகுமார் மட்டும் அங்கு இருந்து உள்ளார். அப்போது அவர்கள் பழனிசாமி பற்றி தவறாக பேசியதால் சசிகுமார் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டேவிட் மற்றும் சிவபெருமான் ஆகிய இருவரும் சேர்ந்து, சசிகுமாரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

  • sirya_dead123

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர் தாக்குதல் : 5 நாளில் 400 பேர் பலி

  • 24-02-2018

    24-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X