SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல ரவுடி வெட்டிக்கொலை

2017-11-15@ 00:17:51

தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ஜீவா (32), பிரபல ரவுடி. இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரபல ரவுடி கல்வெட்டு ரவியின் கூட்டாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், ஜீவாவை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.

சுதாரித்துக்கொண்ட ஜீவா, அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜீவாவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஜீவா இறந்தார்.

முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மங்கா ரவி, ஹரிபாபு, பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் ஜீவாவை வெட்டியதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா?, கள்ளதொடர்பா? அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

  • scotland_fireacci

    கிளாஸ்கோவின் உலக பிரசித்தி பெற்ற கலைப்பள்ளியில் பயங்கர தீ விபத்து : தீயில் கட்டிடம் எரிந்து நாசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்