SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்தாண்டை காட்டிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

2017-11-14@ 21:30:35

புதுடெல்லி:  இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
பாரம்பரியம், கலாசார பெருமை வாய்ந்த இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வெளிநாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். இங்குள்ள பழமைவாய்ந்த கோயில்கள், புராதான சின்னங்களை காண்பதில் ஆர்வம் கொள்கின்றனர். இதனால், இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு அக்டோபரில் மட்டும் 8.76 லட்சம் பேர் வந்துள்ளனர்.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7.42 லட்சம் என்கிறது புள்ளி விவரம். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டை கட்டிலும் 15.8 சதவீதம் அதிகம். வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

வெளிநாடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், எளிதாக விசா வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 1.76 லட்சம் பேருக்கு மின்னணு சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்