SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உல்லாச பங்களாவாக மாறிய மருத்துவமனை அறை 3 வாலிபர்களுடன் இளம்பெண் செக்ஸ்

2017-11-14@ 21:24:05

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை அறையை உல்லாச பங்களாவாக மாற்றி 3 வாலிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்த இளம் பெண்ணை பிடித்து போலீசர் எச்சரித்து அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டத்தை  அடுத்த மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் ஆகி கணவர்,  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு  சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார். மேலும் உடல் ரீதியாக  மனைவியை திருப்திபடுத்த முடியாத நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே அவரது நிலை குறித்து விசாரிக்க நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பார்த்து சென்றார். இப்படி வந்து போகும் போது இளம் பெண்ணுடன் நண்பருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன், குழந்தைகள்  வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையே கள்ளக்காதலனின்  உதவியுடன் அவரது நண்பர்கள் சிலரும் இளம் பெண்ணுக்கு  அறிமுகமாகியுள்ளனர். அவர்களையும் தனது வலையில் வீழ்த்தி இளம் பெண் உல்லாசமாக இருக்க தொடங்கினர். ஆகவே இந்த 3 பேர் மூலமும் இளம் பெண்ணுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைத்தது.

ஆனால் உல்லாசத்துக்கு கணவர், குழந்தைகள்  இடைஞ்சலாக இருப்பதாக அடிக்கடி இளம்பெண் உணர்ச்சி வசப்பட்டார். இந்த  நிலையில் அவரது குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்க புதிய திட்டம் ஒன்றை தீட்டினார் இளம் பெண். மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியை ஒட்டி உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். குழந்தையை பரிசோதித்த  டாக்டர்கள் சிறு காய்ச்சல்தான். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என கூறி  மருந்து கொடுத்தனர். ஆனால் இளம் பெண்ணோ குழந்தையின்  நலன்தான் எனக்கு முக்கியம். எனவே இங்கேயே தங்கி சிகிச்சை பெறுகிறோம். உடல் நிைல பூரண குணம் அடைந்த பிறகு செல்கிறோம் என்றார். டாக்டர்கள் எவ்வளோ எடுத்துக் கூறியும் அந்த இளம் பெண் கேட்கவில்லை. இறுதியாக அடம்பிடித்து தனி அறை ஒன்றை வாங்கி கொண்டார்.  டாக்டர்களும் மருத்துவமனைக்கு  வருமானம் வந்தால் சரியென குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த  நிலையில் ஆசை கள்ளக்காதலர்களை ஒருவர் பின் ஒருவராக செல்போனில் மருத்துவமனை அறைக்கு அழைத்தார். தொடர்ந்து குழந்தை, மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரது கண்ணில் மண்ணை தூவிவிட்டு கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருக்க தொடங்கினார்.
குழந்தையை பார்க்க உறவினர்கள் வந்து செல்கின்றார்கள்? என்று மருத்துவமனை ஊழியர்களும் கண்டு கொள்ளவில்லை. இது ஒருபுறம் இருக்க குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நன்கு தேறிவிட்டான். இதையடுத்து நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று இளம் பெண்ணிடம் டாக்டர்கள் கூறினர்.

ஆனால் இளம் பெண் அதை ஏற்க மறுத்து விட்டார். விடாப்பிடியாக இன்னும் சில நாட்கள் தங்கியிருந்து  குழந்தையின் உடல் நலன் நன்கு தேறியபிறகு செல்கிறேன் என கூறியுள்ளார். இது ஊழியர்களுக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆகவே இளம் பெண்ணின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இளம் பெண்ணை பார்க்க ஆண்கள் வந்தவுடன் அறைக்கதவு மூடிவிடுகிறது. பிறகு  வெகுநேரம் கழித்தே கதவு திறக்கிறது. இதனால் உள்ளே என்ன நடக்கிறது? என்பதை  மருத்துவமனை ஊழியர்கள் உணர்ந்து கொண்டனர். இது குறித்து உடனடியாக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் உடனடி விசாரணையில் இறங்கினர். மருத்துவமனைக்கு வந்து சென்ற ஆண்களை  காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையில் மருத்துவமனை அறையை சொகுசு அறையாக மாற்ற முயன்றதும், வாலிபர்களை அழைத்து இளம் பெண் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இளம் பெண்ணை போலீசார் எச்சரித்தனர். உடனே அறையை காலி செய்து விட்டு கிளம்பு என துரத்தி அடித்தனர். இந்த சம்பவம்  மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்