SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விபத்துக்களை தடுக்க ரயில்வே கிராஸிங்கில் இஸ்ரோ தொழில்நுட்பம்

2017-11-14@ 20:46:10

புதுடெல்லி: விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் இஸ்ரோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக, ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அதிக விபத்துக்களுக்கு காரணமாக இருக்கின்ற ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை மூடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கு முடிவு எட்டப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இப்பணிகள் முடிவடையும் வரை ஆளில்லாத ரயில்வே கிராஸிங் பகுதியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) உதவியை ரயில்வே அமைச்சகம் நாடியுள்ளது. கிராஸிங்கில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கில் ஒரு கருவியும், ரயில் இன்ஜினின் முன் பகுதியில் ஒரு கருவியும் பொருத்தப்படும். இது செயற்கைகோள் உதவியுடன் கண்காணிக்கப்படும். இதன்மூலம், 4 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் வரும்போது, கிராஸிங் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி எச்சரிக்கை செய்யும். ரயில் கடந்துபோன பின்னர் அலாரம் ஒலிப்பது நிற்கும். இது, வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வழிவகை செய்வதுடன், விபத்துக்களையும் தடுக்கிறது. நாடு முழுவதும் 7,254 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகள் உள்ளன. ரயில் விபத்துக்களில் 40 சதவீதம் ஆளில்லாத கிராஸிங்குகளால் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

  • FloridashootingTrump

    புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்