SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

199 இளநிலை உதவியாளர், 125 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்

2017-11-14@ 20:40:46

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்திலுள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர் கல்வியில் சிறந்து விளங்கிட, கட்டணமில்லா கல்வி, விலையில்லா பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், மடிக்கணினிகள், கல்வி உபகரணப் பொருட்கள், உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டப் பொருட்கள் வழங்குதல், பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்கள் தங்குதடையின்றி கல்வி கற்றிட காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பள்ளிக்கல்வித் துறையின் திட்டப் பணிகளை சீரிய முறையில் செயல்படுத்திட ஆசிரியரல்லாத இதர காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டசர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 10 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார்.மீதமுள்ள நபர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களாலும், பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் நியமனம் செய்யப்பட்ட தட்டசர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களாலும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2018

    14-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • asiya_mukesh11

    ஆசியாவை ஆட்டம் காண வைத்த முகேஷ் அம்பானி மகள் திருமணம்

  • kali_ramnatha11

    மியான்மரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : ரீ காளி கோவிலுக்கு சென்று வழிபட்டார்

  • france_gunmanr1

    பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச் சூடு :4 பேர் பலி ; 11 பேர் படுகாயம்

  • upnepalmarg

    நேபாள நாட்டில் ராமர்-சீதாதேவி விவாஹ உற்சவம் : உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்