SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய பஸ்கள் வாங்குவதன் பின்னணி என்ன? குமரியில் 70 சதவீத அரசு பஸ்கள் ஓட்டை

2017-11-14@ 20:03:55

மார்த்தாண்டம்: குமரியில் ஓடுகின்ற 70 சதவீத அரசு பஸ்கள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் ஓட்டை உடைசல்களுடன் காணப்படுகின்றன. பழைய கண்டமான பஸ்கள் மற்றும் தரமற்ற பொருட்களை வாங்குவதினால்தான் இந்த விளைவு ஏற்படுவதாக கூறிய ஊழியர்கள், அமைச்சர் மீதும் பகீர் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 12 அரசு டெப்போக்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 800 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இப்படி இயக்கப்படுகின்ற 70 சதவீத அரசு பஸ்கள் ஓட்டை உடைசலுடன் காணப்படுகின்றன. இவைகளை பழைய இரும்புக்குத்தான் போட வேண்டும். 30 சதவீத பஸ்கள் மட்டுமே ஓரளவு நல்ல கண்டிஷனோடு ஓடுகிறது. அவைகளிலும் குறைகள் உள்ளன. இவற்றை பற்றி அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கோரிக்கைகள் வைத்தாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது பெய்த மழை காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்த கிராம பகுதி மக்கள் பல்வேறு வகைகளிலும் பாதிப்பு அடைந்தனர். ஓட்டு வீடுகளில் காணப்படுகின்ற ஒழுக்கு போல், அரசு பஸ்களின் மேற் கூரைகள் இருந்ததால் பயணிகள் பல்வேறு துன்பங்களை சந்திக்க நேர்ந்தது. இதன் காரணமாக பஸ்சில் சீட்டுகள் காலியாக இருந்தும் அமர முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் என்ன? குமரியில் ஓடுகின்ற அரசு பஸ்கள் காலம் காலத்துக்கும் இப்படித்தான் ஓடுமா? நிரந்தர தீர்வுதான் என்ன? என்ற கேள்வி சாதாரண பொது மக்கள் தொடங்கி அனைவரது மனதிலும் தினசரி எழுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது குறித்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர் கூறியதாவது: குமரி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டமான பஸ்கள்தான் அதிகமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வெளி மாவட்டங்களில் 3 அல்லது 4 வருடங்கள் வரை ஓடி தேய்ந்து போன பழைய பஸ்களை வாங்கி சிறு சிறு வேலைகளை செய்து ஓட்டுவதுதான். குைறந்த விலையில் வாங்குகின்ற இந்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை வாங்கலாம். குமரி அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதால், புதிய பஸ்கள் வாங்குவது இயலாத காரியம். ஆகவேதான் பழைய பஸ்களை வைத்து நிலைைமயை சமாளித்து வருகிறோம். போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதற்கு காரணம் தமிழக அரசுதான். முன்பெல்லாம் போக்குவரத்து கழகத்துக்கு ஆண்டுதோறும் அரசு நிதி வழங்கியது. தற்ேபாது போக்குவரத்து கழகங்களிடம் இருந்து அரசு நிதியை வாங்கி கொள்கிறது. ஆனால் பராமரிப்பு பணி என்று போனால் சொற்ப தொகையை வழங்கி சமாளிக்க சொல்கிறார்கள்.

நல்ல நிலையில் ஓடுகின்ற 20 சதவீத பஸ்களை அரசு வழங்கினால் போதும் நிலைைமயை சமாளித்து விடலாம். ஆனால் அதற்கான நிதியை உயர் அதிகாரிகள் அரசிடம் கேட்டு பெற வேண்டும். அதிகாரிகள் கேட்டாலும் அரசு ஒதுக்குமா? என்பது கேள்விகுறிதான். மழை காலங்களில் பஸ் ஒழுகுகிறது என்றால் அதற்கு காரணம், தரமற்ற பாடிகளை கட்டுவதுதான். இதற்கான தளவாட பொருட்களை தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர். அமைச்சர் கை காட்டும் இடங்களில் இந்த தளவாட பொருட்கள் வாங்கப்படுவதாக தெரிகிறது. ஆகவே பெரிய அளவில் ஊழல் நடக்கிறதோ? என்ற அச்சம் போக்குவரத்து கழக ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். பழைய பஸ்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, ஓரளவு தரமான பொருட்களை பயன்படுத்தினால் போதும். இந்த அளவுக்கு பிரச்னை வராது. இது குறித்து உயர் அதிகாரிகள்தான் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.

அரசு பஸ்சில் ஒழுகல் ஏன்?
பஸ் பராமரிப்பு பணிக்கான தளவாட பொருட்கள் சென்னையில் இருந்து சம்பந்தப்பட்ட டெப்போக்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அரசு பஸ்கள் பெரும்பாலும் 20 முதல் 25 அடி நீளம் கொண்டதாக இருக்கிறது. ஆகவே இந்த நீளத்துக்கு ஒரே ஷீட்டாக போட்டால்தான் மழை காலங்களில் பஸ்சில் ஒழுகல் இருக்காது. சென்னையில் இருந்து வருகின்ற ஷீட்டுகள் துண்டு துண்டாக தரமற்றதாக வாங்கி அனுப்புகின்றனர். இதனால் ஒரே நீள ஷீட்டாக போடாமல் துண்டுகளை போட்டு சமாளிக்குமாறு லோக்கல் காண்டிராக்டர்களுக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். அவர்களும் வேறு வழியில்லாமல் ஏனோ தானோ என்று வேலையை முடித்து காசை வாங்கி விட்டு திரும்புகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • policecampchennai

  சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

 • 2018Underwaterphotos

  2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

 • modi_iran_president

  டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

 • mexico_earhquake

  மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

 • FloridashootingTrump

  புளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவம்: காயமடைந்தவர்களை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து ஆறுதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்