SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை ரத்து கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் டிச. 12ல் விசாரணை

2017-11-14@ 19:10:30

புதுடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படடார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை வரும் டிசம்பர் மாதம் 12ம் தேதி விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவில் ஓடும் பஸ்சில் தனது நண்பருடன் சென்ற மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனயைில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். பலாத்காரம் செய்த 6 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவன் சிறுவன். எஞ்சிய 5 பேரில் ராம்சிங் என்பவன் டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

முகேஷ், பவன், வினய்சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும ்என குற்றவாளிகளில் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்்ரா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. எஞ்சிய 3 குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், தங்கள் தரப்பில் 3 வாரங்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்றனர். இதைக் கேட்ட நீதிபதிகள் 4 சீராய்வு மனுக்கள் மீதும் டிசம்பர் 12ம் தேதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்