SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைவாய்ப்பை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை சீரமைக்க மத்திய அரசு திட்டம்

2017-11-14@ 17:48:22

டெல்லி: வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை இலக்காக கொண்டு தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை, முக்கியத்துறைகளை மேம்படுத்தும் வகையில் சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதற்கு வாய்ப்புள்ள முக்கியமான துறைகளைத் தேர்வு செய்து அவற்றை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன்படி, தோல் பதனிடுதல், ஜவுளி உற்பத்தி, ஆயத்த ஆடை தயாரிப்பு, பொறியியல், ஆட்டோ மொபைல் மற்றும் மருந்துத் துறைகள் மீது கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 25 துறைகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடச் செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்