SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கழுதையும் சகிப்புத்தன்மையும்

2017-11-14@ 09:57:56

இன்றைக்கு கழுதைகள் வெகுவாய் அருகிவிட்டன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி விலங்காகும். சலவைத் தொழிலாளிகளுக்குப் பொதி சுமக்கும் பணியைச் செய்து வந்தது. காலமாற்றத்தால் இதன் தேவை வெகுவாய் குறைந்துவிட்டது. தற்போது மலைக்கிராமங்களில் பாரம் சுமக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்றாகும். கழுதை சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. இதற்கு தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம், இதனால் கரடு முரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலும் காட்டுக்கழுதைகள் 102 முதல் 142 செமீ வரையும், வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91 முதல் 142 செமீ வரையும் வளர்கின்றன. மிதமான பாலை நிலங்களிலும் இவை வாழும் திறன் கொண்டது. குதிரையை விட குறைவான உணவே உண்ணும். அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் ‘லேமினிடிஸ்’ என்ற நோயினால் பாதிக்கப்படும். கழுதைகளால் அதிக சப்தத்தில் ஒலி எழுப்ப முடியும். இதன் கணைத்தல் மற்ற விலங்குகள் எழுப்பும் எலியைவிட வித்தியாசமாகவும், நகைப்பாகவும் இருக்கும். பெரியளவில் பயன்பாடின்றி உள்ள இந்தக் கழுதையை இழிவாகப் பார்க்கும் நிலையே உள்ளது. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்வதும், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி தவறு செய்பவர்களை அவமானப்படுத்துவது, மோசமான பாடலின்போது கழுதை கணைப்பது என்று இழிநோக்கிலே இந்த இனம் சித்திகரிக்கப்படுகிறது. மிருகக்காட்சி சாலையி–்ல்தான் இனி பார்க்க முடியும் என்ற அளவிற்கு இதன் இனம் அருகி வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saamiyarrape129

  சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

 • 25-04-2018

  இன்றைய சிறப்பு படங்கள்

 • ShangaiConstrutionBank

  ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

 • YemenAirstrikeSaudi

  ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

 • CherobylNuclearPowerplant

  32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்