SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2017-11-14@ 09:56:04

2,500 அடி உயர மலை ஏறி பள்ளி செல்லும் குழந்தைகள்

சீனாவின் சிசுயான் மாகாணத்தில் உள்ள அதுலீர் கிராம மாணவர்கள் 2,500 அடி உயர மலை ஏறி பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஒருமுறை பள்ளிக்கு சென்றால் அங்கேயே 15 நாட்கள் தங்கி படிப்பார்கள். பின்னர் கீழே இறங்கி வீட்டுக்கு வருவார்கள். இதுதான் வழக்கம். அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் மலை ஏற ஆபத்தான மூங்கில் ஏணிகளை கடந்து சென்று வந்தனர். கடந்தாண்டு இந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுத்து, இரும்பு ஏணியை அமைத்திருக்கிறது. இதில் பிஞ்சு குழந்தைகள் ஏறி செல்வதை பார்க்கும் போதே பதறுகிறது. உலகிலேயே மிக ஆபத்தான பள்ளி இதுவே.

புலியிடம் சிக்கிய ஊழியரை காப்பாற்றிய மக்கள்


ரஷ்யாவின் கலினின்கிராடு வனவிலங்கு பூங்காவில் புலிக்கு உணவு வைக்க சென்ற பெண் ஊழியர் நடேஸ்டா வஸ்தவா புலியிடம் சிக்கிக் கொண்டார். டெல்லி வனவிலங்கு பூங்காவில் ஒருவர் தவறிவிழுந்து புலியிடம் சிக்கியதைப் போலவே, நடேஸ்டாவும் புலியிடம் சிக்கி மரண ஓலமிட்டார். அவரை கடித்து குதற புலியும் தயாரானது. அப்போது, தடுப்பு வேலிக்கு மேலே இருந்த பார்வையாளர்கள் சத்தம் எழுப்பியும், கையில் கிடைத்த கற்கள், மர பெஞ்ச்சுகள், டேபிள்களை வீசி எறிந்ததாலும் நடேஸ்டாவை விட்டு புலி சென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக நடேஸ்டா உயிர் தப்பி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பாதுகாப்பு விதிமுறை மீறி பெண் ஊழியர் நடந்து கொண்டதால் இந்த அசம்பாவிதம் நடந்திருப்பதாக பூங்கா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மண்டை ஓடு திருவிழா


பொலிவியாவின் லா பாசிலில் உள்ள பழமையான மயானத்தில் மண்டை ஓடு திருவிழா ஆண்டுதோறும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது. இதில், முன்னோர்களின் மண்டை ஓட்டை அலங்கரித்து, பூ வைத்து, கண்ணாடி அணிவித்து விதவிதமான அலங்காரம் செய்துகொண்டு வந்து வழிபடுகின்றனர். சிலர் மண்டை ஓடுகளுக்கு சிகரெட் வைத்தும் வழிபட்டனர். இதன் மூலம் தங்களுக்கு செல்வம், வெற்றி, வளம் கிடைக்கும் என பொலிவியா மக்கள் நம்புகின்றனர்.

யார் தலையில் விழப் போகிறதோ?

சீனாவின் முதல் விண்வெளி நிலையமான டியான்காங்-1 கட்டுப்பாட்டை இழந்து, கடந்தாண்டு செயலிழந்து பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்த டியான்காங்-1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து வரும் 2020ம் ஆண்டில் மிகப் பெரிய விண்வெளி நிலையத்தை கட்டமைக்க சீனா திட்டமிட்டிருந்தது. ஆனால் அது நடக்காமல் போனது. தற்போது டியான்காங்-1 விண்கலம் எங்கு, எப்போது பூமியில் விழும் என்பதை சீன விஞ்ஞானிகள் கணித்து வருகின்றனர். வளிமண்டலத்திற்குள் நுழைந்ததுமே அது எரிந்து விடும் என்றாலும் சில பாகங்கள் பூமியில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவை அநேகமாக வரும் ஜனவரியில் இந்தியா, சவுதி அரேபியா, ஸ்பெயின், இத்தாலி, துருக்கி ஆகிய ஏதாவது ஒரு நாட்டில் விழலாம் என சீன விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

உருண்டு செல்வதில் உலக சாதனை

சீனாவை சேர்ந்தவர் லியு டெங்க் (வயது 26). இவர் வண்டி சக்கரம் போல் உடலை வளைத்து உருண்டு செல்வதில் உலக சாதனை படைத்திருக்கிறார். 20 மீட்டர் தூரத்தை வெறும் 15.54 வினாடிகளில் கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன் 2013ல் இங்கிலாந்தின் லெய்லானி பிரான்கோ 17.47 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ரப்பர் போன்று வளையும் உடலமைப்பை கொண்ட லியு டெங்க்கின் சாதனை முயற்சி வீடியோ பார்வையாளர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்