SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்துக்கும் ஒரே ஜிஎஸ்டி? : அருண்ஜெட்லி மறுப்பு

2017-11-14@ 01:04:13

புதுடெல்லி: அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விகிதம் கொண்டுவரப்பட மாட்டாது என அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை  வரி (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்ததில் இருந்து, மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டன. 5, 12, 18, 28  சதவீதம் என நான்கு வகை வரி பிரிவுகளில் பொருட்கள் மற்றும் சேவைகள் அடக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் நடந்த 23வது ஜிஎஸ்டி கவுன்சில்  கூட்டத்தில், 28 சதவீதத்தில் இருந்த 177 பொருட்கள் அதைவிட குறைந்த வரி பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கு வரி விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று கூறியதாவது:  ஜிஎஸ்டி வரி குறைப்பையும் தேர்தலையும்  ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமான அரசியல். தேர்லுக்காக வரி குறைக்கப்படவில்லை. சிலர் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஒரே வரி  விகிதம் கொண்டுவரப்படுமா என எதிர்பார்க்கின்றனர். விலை நிர்ணய முறையை புரிந்து கொள்ளாதவர்கள்தான் இவ்வாறு கூறுகின்றனர். எனவே இது  சாத்தியமற்றது. அதேநேரத்தில், ஜிஎஸ்டி காலப்போக்கில் பரவலாக்கப்பட்டு, மாற்றி அமைக்கப்படும் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annanagar_iknt

    அண்ணாநகரில் அம்மா அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • perunthu_makkal11

    பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • thamilgam_porattam1

    வரலாறு காணாத பேருந்து கட்டண உயர்வு எதிரொலி : தமிழகத்தில் வலுக்கும் போராட்டங்கள்

  • republice_dayy1

    குடியரசு தின விழா : மெரீனாவில் மாணவர்களின் நடன ஒத்திகை நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்